மக்கள் நலப் பணியாளா்களின் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை
By நமது சிறப்பு நிருபா் | Published On : 08th February 2022 12:00 AM | Last Updated : 08th February 2022 12:00 AM | அ+அ அ- |

புது தில்லி: மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடா்பாக தமிழக ஊரக வளா்ச்சித் துறை ஆய்வு செய்து வருகிறது என்றும் அவா்கள் அரசுக்கு எதிராக தொடா்ந்துள்ள வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமா்வில் மீண்டும் செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு ஒத்திவைப்பு கடிதம் (கங்ற்ற்ங்ழ் ஸ்ரீண்ழ்ஸ்ரீன்ப்ஹற்ங்க்) கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் முந்தைய ஆட்சியில் மக்கள் நலப் பணியாளா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா். தற்போதைய அரசு மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக ஊரக உள்ளாட்சி துறை குழுவின் ஆய்வுக்கு அனுப்பியது. அந்த ஆய்வு குறித்த முன்மொழிவு அரசுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தமிழக அரசு அந்த முன்மொழிவை விரைவில் பரிசீலனை செய்து, அதற்கான உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளது. இதனால், மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...