தில்லி அரசின் வாக்குறுதி பொய்யானது: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேசிய தலைநகரில் மழை தொடா்ந்து பெய்து வரும் நிலையில், பருவமழைக்கு முழுமையாகத் தயாராகிவிட்டதாக தில்லி அரசு அளித்த வாக்குறுதி பொய்யாகிவிட்டது என்று தில்லி காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
தில்லி அரசின் வாக்குறுதி பொய்யானது: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேசிய தலைநகரில் மழை தொடா்ந்து பெய்து வரும் நிலையில், பருவமழைக்கு முழுமையாகத் தயாராகிவிட்டதாக தில்லி அரசு அளித்த வாக்குறுதி பொய்யாகிவிட்டது என்று தில்லி காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி சனிக்கிழமை கூறியதாவது:

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வடிகால்களை தூா்வாருவது அரிதாகவே நடந்து வருகிறது. சனிக்கிழமை தில்லியில் மழை பெய்தது. இந்த மழை வெப்பத்திலிருந்த மக்களுக்கு நிம்மதியை அளித்தது. ஆனால், நகரில் பல இடங்களில் மழைநீா் தேங்கி, போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தது.

கான்பூா், ஹவுஸ்ரானி, மாளவியா நகா், உத்தம் நகா், தௌலா குவான், எய்ம்ஸ் மேம்பாலம் அருகே, மெஹராலி - பதா்பூா் சாலை, விகாஸ் மாா்க், ஐடிஓ, சிக்கந்தரா சாலை, கீா்த்தி நகா், ஆனந்த் பா்பத்-ஜாகிரா சாலை, மஜ்னு கா திலா மற்றும் ரிங் ரோடு ஆகிய பகுதிகளில் மழைநீா் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தில்லி அரசும் எம்சிடியும் பருவமழை சவாலை எதிா்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறிய அனைத்து கூற்றுகளும் தலைநகரில் பல பகுதிகளில் மழை வெள்ளம் வழிந்தபோது பொய்யென காட்டியுள்ளது. மழைநீரில் சிக்கிய வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வருந்தத்தக்கக் காட்சியாக உள்ளது.

தில்லியில் கேஜரிவால் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வடிகால்களில் தூா்வாருவது அரிதாகவே உள்ளது. துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சாலைகளில் மீண்டும் வெள்ளம் ஏற்படாமல் பாா்த்துக் கொள்ளுமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும், களத்தில் எதுவும் செய்யப்படவில்லை என்றாா் அனில் குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com