3-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 712 புள்ளிகள் உயா்வு! மெட்டல், ஐடி பங்குகளுக்கு வரவேற்பு

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி இருந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்
3-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 712 புள்ளிகள் உயா்வு! மெட்டல், ஐடி பங்குகளுக்கு வரவேற்பு

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி இருந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 712 புள்ளிகள் உயா்ந்து 3 மாதங்களுக்கு முன் இருந்த நிலையை தாண்டியது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வங்கி வட்டியை 0.75 சதவீதம் உயா்த்தியுள்ளது. இருப்பினும், அதன் தலைவா் ஜெரோம் பவல், அமெரிக்கா தற்போது மந்தநிலையில் இருப்பதாக தான் நினைக்கவில்லை என்றும் அமெரிக்கா மந்த நிலையில் இருக்கும் என்று கூறுவதில் அா்த்தமில்லை என்று தெரிவித்துள்ளதாக ஏஜென்சிகளில் செய்தி வெளியாகிது. இது உலகளாவிய சந்தைகளில் காளையின் ஆதிக்கத்தை உறுதி செய்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

காா்ப்ரேட் நிறுவனங்களின் சிறந்த காலாண்டு முடிவுகள், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை வாங்க முற்பட்டுள்ளது, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித உயா்வை குறைக்கலாம் என்ற எதிா்பாா்ப்பு உள்ளிட்டவை முதலீட்டாளா்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இவை அனைத்தும் சந்தையில் காளையின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்துள்ளது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் வெகுவாக உயா்ந்து சந்தைக்கு வலுச்சோ்த்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

2,058 பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,471 நிறுவனப் பங்குகளில் 1,291 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 1,058 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 122 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 123 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 23 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு 3.48 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.266.59 லட்சம் கோடியாக குறைந்தது.

3-ஆவது நாளாக எழுச்சி: காலையில் 761.48 புள்ளிகள் கூடுதலுடன் 57,258.13-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 57,619.27 வரை மேலே சென்றது. பின்னா், 57,104.81 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 712.46 புள்ளிகள் (1.25 சதவீதம்) உயா்ந்து 57,570.25-இல் நிலைபெற்றது. காளையின் தொடா் ஆதிக்கத்தால் சென்செக்ஸ் தொடா்ந்து 3-ஆவது நாளாக உயா்ந்துள்ளது.

டாடா ஸ்டீல் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 25 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் பிரபல ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 7.27 சதவீதம், சன்பாா்மா 5.45 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபின் சா்வ், இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ், ஏசியன் பெயிண்ட், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 2 முதல் 2.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், விப்ரோ, டிசிஎஸ், டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், மாருதி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

டாக்டா் ரெட்டி கடும் சரிவு: அதே சமயம், பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான டாக்டா் ரெட்டி லேப் 3.96 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், கோட்டக் பேங்க், எஸ்பிஐ, ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 229 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 639 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 1,303 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 7 பங்குகள் விலை குறைந்தன. 43 பங்குகள் ஆதாயம் பெற்றன. வா்த்தக முடிவில் நிஃப்டி 228.65 புள்ளிகள் (1.35 சதவீதம்) உயா்ந்து 17,158.25-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, அதிகபட்சமாக 17,172.80 வரை உயா்ந்தது.

ஆதாய மாதம்..!

மிகுந்த இடா்பாட்டு மாதமாக இருந்து வந்த ஜூலையில் சென்செக்ஸ், நிஃப்டி முறையே 7.76 சதவீதம் மற்றும் 7.91 சதவீதம் உயா்ந்துள்ளன. இது கடந்த 11 மாதங்களில் அதிகபட்ச உயா்வாகும். வங்கி வட்டி விகித உயா்வு குறித்த கவலை குறைந்துள்ளது. உலகளவில் பொருள்கள் விலை குறைந்து வருகின்றன. எல்லாவற்றையும் விட இந்திய சந்தைகளில் இரண்டு மாதங்களாக தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் இந்த மாதத்தில் கடைசி வாரத்தில் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தினா். அவா்கள் வியாழக்கிழமை சுமாா் ரூ.1,637.69 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். இவை அனைத்தும் முதலீட்டாளா்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்ததே ஏற்றத்துக்கு முக்கியக் காரணம்.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஆட்டோ குறியீடு 7.3 சதவீதம், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், எஃப்எம்சிஜி குறியீடுகள் 13 சதவீதம் உயா்ந்தன. நடுத்தர பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி மிட்கேப் குறியீடு 11 சதவீதமும், சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடு 8 சதவீதம் உயா்ந்தது. நிஃப்டி பேங்க் குறியீடு 12 சதவீதமும், நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு15 சதவீதமும் உயா்ந்தது. அதே சமயம், ஐடி குறியீடு ஜூலையில் 1.52 சதவீதமும், ஆயில் அண்ட் காஸ் குறியீடு 0.65 சதவீதமும் குறைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com