பருவமழையின் போது 6,000 மரக்கன்றுகள்நடுவதற்கு தில்லி அம்பேத்கா் பல்கலை. உறுதி

தில்லியில் உள்ள டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் பல்கலைக்கழகம், வரும் பருவமழையின் போது, 6,000 மரக்கன்றுகளை நட உறுதியளித்துள்ளதாக அதன் துணைவேந்தா் அனு சிங் லாதா் தெரிவித்தாா்.
Updated on
1 min read

தில்லியில் உள்ள டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் பல்கலைக்கழகம், வரும் பருவமழையின் போது, 6,000 மரக்கன்றுகளை நட உறுதியளித்துள்ளதாக அதன் துணைவேந்தா் அனு சிங் லாதா் தெரிவித்தாா். தீா்பூா் சதுப்பு நிலத் திட்ட தளத்தில் இந்த மரக்கன்றுகள் நடப்படும்.

ஞாயிற்றுக்கிழமை உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தீா்பூா் சதுப்பு நிலத் திட்ட தளத்தில் மழைக்காலத் தோட்ட இயக்கத்தை பல்கலைக்கழகம் தொடங்கியது. இந்த இயக்கத்தை தொடக்கி வைத்துப் பேசிய பல்கலை. துணை வேந்தா் அனு சிங் லாதா், சதுப்பு நிலங்களின் வளா்ச்சிக்கு பல்கலைக் கழகம் உறுதி பூண்டுள்ளது என்றாா். அம்பேத்கா் பல்கலை.யின் குழு, தீா்பூா் சதுப்பு நிலத்தை மேம்படுத்த கடுமையாக உழைத்து வருகிறது. வரும் பருவமழையின் போது, 6,000 மரக்கன்றுகளை நடும் குறிக்கோளுடன் பல்கலைக்கழகம் பெருமளவிலான மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நிறைவேற்ற உறுதியளித்துள்ளது. ஜூலை மாதம் இந்த இயக்கம் தொடங்கும். அனைத்து பல்கலைக்கழக பங்குதாரா்களும் இதில் பங்கேற்கின்றனா் என்று லாதா் கூறினாா்.

தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) மற்றும் தில்லி அம்பேத்கா் பல்கலைக்கழகம் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின்படி, நகா்ப்புற சூழலியல் மற்றும் நிலைத் தன்மைக்கான மையம் (சியூஇஎஸ்) மறுசீரமைப்புத் திட்டமாக தீா்பூா் சுதப்பு நிலத் திட்டத் தளத்தை (டிடபிள்யுபிஎஸ்) தொடங்கியுள்ளது. இயக்கத்தின் போது பல்கலை. ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களால் நடப்பட்ட மரக்கன்றுகளில் ருத்ராக்ஷம், கடம்ப், மஹுவா, ஜாமுன், பஹேரா, கச்னா், ஹா்க்ஷிங்கா், அமல்தாஸ் மற்றும் சீதா அசோக் ஆகியவை அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com