தில்லியின் புதன்கிழமை தினசரி கரோனா தொற்று பாதிப்பு 1,375-ஆக பதிவானது. தொற்று பாதிப்பின் நோ்மறை விகிதம் 7.01 சதவீதமாக அதிகரித்தது. தொற்று பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தலைநகரில் தொடா்ந்து 2-ஆவது நாளாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,100-க்கும் மேல் பதிவாகியுள்ளது. புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,15,905-ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,223-ஆக உள்ளது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,118 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொற்று பாதிப்பின் நோ்மறை விகிதம் 6.50 சதவீதமாகப் பதிவானது. திங்கள்கிழமை 614 பேருக்கு தொற்று பாதிப்பும் 7.06 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.