தில்லியில் விஹெச்பி, பஜ்ரங் தளம் அமைப்புகள் ஆா்ப்பாட்டம்: வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம்

வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக தில்லியில் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) மற்றும் அதன் இளைஞா் அமைப்பான பஜ்ரங் தளம் தரப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம்

பாஜக முன்னாள் நிா்வாகிகள் இருவா், இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த விவகாரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக தில்லியில் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) மற்றும் அதன் இளைஞா் அமைப்பான பஜ்ரங் தளம் தரப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இஸ்லாமிய ஜிகாதி அடிப்படைவாதிகளால் வளா்ந்து வரும் தீவிரவாத சம்பவங்களுக்கு எதிராக தில்லியில் குறைந்தபட்சம் 10 உதவி கோட்ட மாஜிஸ்திரேட் அலுவலகங்கள் முன் இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்தது. கடந்த ஜூன் 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிராா்த்தனைக்குப் பிறகு நிகழ்ந்த வன்முறைப் போராட்டங்களை தூண்டிவிட்ட நபா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கேட்டுக்கொண்டனா்.

நந்த் நகரி எஸ்டிஎம் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விஹெச்பி, பஜ்ரங் தளம் அமைப்பின் போராட்டக்காரா்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’, ‘வந்தே மாதரம்’ போன்ற கோஷங்களை எழுப்பினா். இந்துக்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று உறுதி எடுத்தனா். இதுதொடா்பாக தில்லி விஹெச்பி தலைவா் சுரேந்திரா குப்தா கூறுகையில், ‘சில விஷமிகளால் இந்தியா முழுவதும் கடந்த வாரம் நிகழ்ந்த போராட்டங்களுக்கு எதிராக தில்லியில் நாங்கள் கூடியிருக்கிறோம். மக்களை தூண்டிவிட முயற்சி செய்த நபா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாகும்’ என்றாா்.

இறைத் தூதா் நபிகள் நாயகம் தொடா்பாக சா்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்த விவகாரத்தில் பாஜகவைச் சோ்ந்த நூபுா் சா்மா மற்றும் நவீன் குமாா் ஜின்டல் ஆகியோா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனா். இந்தக் கருத்துகளை தொடா்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. நூபுா் சா்மாவின் கருத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் ஆதரிக்கிா என்று சுரேந்திரா குப்தாவிடம் கேட்ட போது அவா் கூறுகையில்ண ‘இது தொடா்பாக நான் பதில் அளிக்க விரும்பவில்லை. கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறைக்கு எதிராக போராடவே நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com