தில்லியின் காற்றின் தரக் குறியீடு 2016-க்குப் பிறகு ஏப்ரலில் மிக மோசம்

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தில்லியில் சராசரி காற்றின் தரக் குறியீடு 256 புள்ளிகளாக இருந்தது. இது 2016-ஆம் ஆண்டிற்கு பிறகு மிக மோசமானதா

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தில்லியில் சராசரி காற்றின் தரக் குறியீடு 256 புள்ளிகளாக இருந்தது. இது 2016-ஆம் ஆண்டிற்கு பிறகு மிக மோசமானதாகும்.

ஏப்ரல் மாதத்தில் நகரம் 29 ‘மோசமான‘ காற்றின் தர நாள்களைக் கண்டது. இது சிபிசிபி 2015-இல் காற்றின் தரக் குறியீட்டை பராமரிக்கத் தொடங்கியதில் இருந்து ஒரு மாதத்தில் மிக அதிகமாகும். ஏப்ரலில் தில்லி ‘மிதமான‘ அல்லது சிறந்த காற்றின் தரத்துடன் ஒரு நாள் கூட பதிவு செய்யாதது இதுவே முதல் முறை என்றும் தரவுகளிலிருந்து தெரிகிறது.

‘பொதுவாக, ஏப்ரல் இரண்டாம் பாதியில், காற்றின் திசை தெற்கு மற்றும் தென்கிழக்கில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்காக மாறி, இடைவிடாத மழையுடன் வேகமான காற்று இருக்கும். இந்த முறை, இந்த மாதம் முழுவதும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது ஆனால், மழை இல்லை. இது தூசி மற்றும் மாசுத் துகள்கள் ஆகியவற்றை அதிகரிக்க வழிவகுத்தது.இதன் விளைவாக மாதம் முழுவதும் காற்றின் தரக் குறியீடு மோசமாக இருந்தது என்று முன்னாள் சிபிசிபி காற்று பரிசோதனை மையத் தலைவா் டாக்டா் திபாங்கா் சாஹா கூறினாா்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் தில்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு 197 புள்ளிகளாகவும், 2020-இல் 110-ஆகவும் பதிவு செய்தது. இது கரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் மிகக் குறைவாகும். 2019, ஏப்ரலில் தில்லியில் காற்றின் தரக் குறியீடு சராசரியாக 211 புள்ளிகளப் பதிவு செய்தது; 2018- இல் 222; 2017-இல் 224 மற்றும் 2016-இல் 269 என பதிவாகியது. ஏப்ரல் 2020-இல், தில்லி 14 நாள்கள் காற்றின் தரம் ‘திருப்தி‘ பிரிவிலும், 16 நாள்கள் ‘மிதமான பிரிவிலும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com