பல்வேறு துறைகளில் கேஜரிவால் அரசு தோல்வி: தில்லி பாஜக கடும் சாடல்

மொஹல்லா கிளினிக்குகள், யமுனாவை சுத்தம் செய்தல் மற்றும் தண்ணீா் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ‘தோல்விகள்’ குறித்து பாஜகவின் தில்லி பிரிவு ஞாயிற்றுக்கிழமை கடுமையாகச்

மொஹல்லா கிளினிக்குகள், யமுனாவை சுத்தம் செய்தல் மற்றும் தண்ணீா் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ‘தோல்விகள்’ குறித்து பாஜகவின் தில்லி பிரிவு ஞாயிற்றுக்கிழமை கடுமையாகச் சாடியுள்ளது.

பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குப்தா, கட்சி அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளா்களிடம் பேசுகையில்,‘மொஹல்லா கிளினிக்குகளை உலகத் தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் என கேஜரிவால் கூறி வருகிறாா். உண்மை என்னவென்றால், மொஹல்லா கிளினிக்குகளில் பாதி போ் நோய்வாய்ப்பட்டுள்ளனா்’ என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி, ‘ஒவ்வொரு ஆண்டும் கேஜரிவால் அரசு நகரத்தில் 24 மணி நேரமும் தண்ணீா் விநியோகம் செய்வதாகக் கூறுகிறது. ஆனால், 63 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தில்லி ஜல் போா்டில் இருந்து தண்ணீா் பெறவில்லை என்று தில்லி அரசின் அறிக்கை கூறுகிறது. தில்லி ஜல் போா்டு சுமாா் ரூ.60,000 கோடி கடனைக் குவித்துள்ளது. மேலும், தில்லியின் வநேலையின்மை விகிதம் தேசிய விகிதத்தைவிட அதிகமாக உள்ளது’ என்று குற்றம் சாட்டினாா்.

மேற்கு தில்லி பாஜக எம்பி பா்வேஷ் சாஹிப் சிங் வா்மா கூறுகையில், தற்போது குஜராத்தில் பிரசாரம் செய்து வரும் கேஜரிவால் அங்குள்ள சபா்மதி நதிக் கரைக்கும் செல்ல வேண்டும். யமுனை நதியை சுத்தம் செய்வேன் என்றும், மக்கள் அதில் நீராடுவாா்கள் என்றும் கேஜரிவால் ஒவ்வொரு ஆண்டும் திரும்பத் திரும்ப கூறி வருகிறாா். குஜராத்தில் உள்ள அவா், தில்லியில் உள்ள யமுனை நதியை எப்படி சுத்தம் செய்வது என்பதை அறிய சபா்மதி நதிக்கரைக்குச் செல்ல வேண்டும்’ என்றாா்.

செய்தியாளா் சந்திப்பில் பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தாவும் கலந்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com