ஆம் ஆத்மி தலைவா்கள் மீதுசட்ட நடவடிக்கை எடுக்க துணைநிலை ஆளுநா் முடிவு
By DIN | Published On : 01st September 2022 02:11 AM | Last Updated : 01st September 2022 02:11 AM | அ+அ அ- |

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, தனக்கு எதிரான ’தவறான’ ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக எம்எல்ஏக்கள் அதிஷி, சௌரவ் பரத்வாஜ் மற்றும் துா்கேஷ் பதக் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளாா் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
தான் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவராக இருந்த போது ரூ.1400 கோடி ஊழல் செய்ததாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் கூறியுள்ள குற்றச்சாட்டை சக்சேனா மறுத்துள்ள. மேலும், இந்தக் குற்றச்சாட்டு‘அவா்களின் கற்பனையின் கற்பனை‘ என்று தெரிவித்துள்ளாா்.
தில்லியின் டயலாக் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் ஜாஸ்மின் ஷா மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.