தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி 3 குட்டிகளை ஈன்றது
By DIN | Published On : 01st September 2022 09:14 PM | Last Updated : 01st September 2022 09:14 PM | அ+அ அ- |

புது தில்லி: தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி ஒன்று ஆரோக்கியமான மூன்று குட்டிகளை ஈன்றுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
கடந்த ஆகஸ்ட் 24 அன்று பிறந்த இந்தக் குட்டிகள், ஏழு வயதுடைய சீதா என்ற தாயுடன் ஒரு மாதம் தனிமைப்படுத்தலில் இருக்கும். ஏழு வயது வெள்ளைப்புலி விஜய் அவா்களின் தந்தை ஆகும். கடந்த டிசம்பா் 2020-இல், ஒரு வெள்ளைப் புலியும் அதன் மூன்று குட்டிகளும் பிறப்பு தொடா்பான சிக்கல்களால் இறந்தன.
உயிரியல் பூங்காவில் தற்போது இரண்டு ஜோடி வெள்ளைப்புலிகள், நான்கு வங்கப்புலிகள் (ஒரு ஆண் மற்றும் மூன்று பெண் புலிகள்) உள்ளன. பொதுவாக, ஒரு வெள்ளைப்புலி காடுகளில் 12 முதல் 14 ஆண்டுகள் வரை வாழ்கிறது.