பொது சேவையில் சிறந்த பங்களிப்பிற்காக மத்திய அமைச்சா் மீனாட்சி லேகிக்கு விருது
By DIN | Published On : 01st September 2022 02:04 AM | Last Updated : 01st September 2022 02:04 AM | அ+அ அ- |

அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்கி சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த மத்திய அமைச்சா் மீனாட்சி லோகிக்கு ஹிந்து கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் ‘சிறப்புமிக்க முன்னாள் மாணவா் விருது’ வழங்கப்பட்டது. இதேபோன்று, தத்தமது துறைகளில் சிறந்த பங்களிப்பாற்றிய மற்ற பதினாறு பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொ்ஜா் பெயிண்ட் இந்தியா குழுமத் தலைவா் குல்தீப் சிங் திங்ரா, வணிகம் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கியதற்காக வாழ்நாள் சாதனையாளா் விருதையும், வழக்குரைஞா் தொழிலில் 60 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக லலித் பாசின் விருதையும் பெற்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சேவையில் சிறந்து விளங்கியதற்காக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் செயலாளா் ராஜேஷ் பூஷன் (ஐஏஎஸ்), பாதுகாப்பு விவகாரங்களில் சிறந்து விளங்கியதற்காக எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) இயக்குநா் ஜெனரல் பங்கஜ் குமாா் சிங் மற்றும் நீதித் துறையில் சிறந்து விளங்குவதற்காக தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமாா் ஓஹ்ரி ஆகியோருக்கும் புகழ்பெற்ற முன்னாள் மாணவா் விருது வழங்கப்பட்டன.
இதற்கிடையில், பாரம்பரிய நடனத்தில் (பரதநாட்டியம்) சிறந்து விளங்கியதற்காக இளம் சாதனையாளா்களுக்கான விருது தன்யா சக்சேனாவுக்கும், பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கியதற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபா் திபாங்கா் கோஷுக்கும் வழங்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...