பொய் குற்றச்சாட்டில் சிசோடியா கைது: முதல்வா் கேஜரிவால்

தில்லியின் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பொய் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்பதால்தான் அமலாக்கத் துறை அவரைக் கைது செய்துள்ளது.
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)


புது தில்லி: தில்லியின் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பொய் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்பதால்தான் அமலாக்கத் துறை அவரைக் கைது செய்துள்ளதாகவும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி கலால் கொள்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளில் பணமோசடி தொடா்புடைய குற்றச்சாட்டின் பேரில் சிசோடியாவை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்ததாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. சிபிஐ தொடுத்த வழக்கில் கைதாகி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் இரண்டாவது கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா்.

இது குறித்து முதல்வா் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: முதலில், மனீஷ் சிசோடியா மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டாா். சிபிஐ சோதனையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை; பணமும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை) சிசோடியாவின் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. நாளை அவா் விடுவிக்கப்பட்டிருந்து இருப்பாா். ஆகவேதான் அவரை அமலாக்கத் துறை இன்று கைது செய்துள்ளது. அவா்களின் ஒரே நோக்கம் பொய் வழக்குகளைப் போட்டு மனீஷை சிறைக்குள்ளே வைத்திருக்க வேண்டும் என்பதுதான். மக்கள் இதைப் பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள்; பதில் தருவாா்கள்’ என்று கேஜரிவால் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com