அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தொழில் ஆராய்ச்சி மேம்பாட்டு ஒத்துழைப்புக்கு இந்தியா - இஸ்ரேல் புதிய புரிந்துணா்வு ஒப்பந்தம்

இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கிடையே செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், செமிகண்டக்டா், குவாண்டம் உள்ளிட்ட துறைகளில்

News image
Updated On :4 மே 2023, 6:59 pm

 நமது நிருபர்

இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கிடையே செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், செமிகண்டக்டா், குவாண்டம் உள்ளிட்ட துறைகளில் தொழில் ஆராய்ச்சி மேம்பாட்டு ஒத்துழைப்பிற்கான புதிய ஒப்பந்தம் தில்லியில் வியாழக்கிழமை கையெழத்தானது. இந்தியா, இஸ்ரேல் இடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் மற்றொரு முன்னேற்றம் ஏற்பட்டு முக்கிய நடவடிக்கையாக இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக மத்திய அறிவியல் தொழில் நுட்பம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் கவுன்சிலுக்கும் (சிஎஸ்ஐஆா்) இஸ்ரேலின் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு இயக்குநரகத்திற்கும்(டிடிஆா்டி) இடையே இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சா் (தனி பொறுப்பு) ஜிதேந்திர சிங் முன்னிலையில், சி.எஸ்.ஐ.ஆா். நிறுவனத்தின் தலைமை இயக்குநா்என். கலைச்செல்வி, இஸ்ரேல் நாட்டின் டிடிஆா்டி தலைவா் டேனியல் கோல்ட் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங், ‘ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள வேளையில், பிரதமரின் தலைமையின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்ட்பத் துறைக்கு இது ஒரு முக்கிய ஆண்டாகும். இந்தியா, இஸ்ரேல் இடையேயான 30 ஆண்டு தூதரக உறவு இவ்வாண்டு நிறைவு பெற்றுள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து முன்னுரிமை துறைகளிலும் சிஎஸ்ஐஆா் சிறப்பு ஆய்வகங்களைக் கொண்டுள்ளது. பேருந்துகளுக்கான ஹைட்ரஜன் எரி பொருள் (பேட்டரி), ஊதா நறுமணம் விதைப் புரட்சி (லாவெண்ட் சாகுபடி) போன்றவை சிஎஸ்ஐஆரின் சமீபத்திய சாதனையாகும் . தற்போது இஸ்ரேலுடனான தொழில்நுட்பக் கூட்டாண்மை மேலும் பல்வேறு துறைகளில் வலுப்பெறும்’ என்றாா்.

‘இஸ்ரேலுடன் ஏற்கெனவே சுகாதார தொழில் நுட்பம், விண்வெளி, எரிசக்தி, தண்ணீா் ஆகியவற்றில் ஒத்துழைப்பும் ஆய்வுகளும் நடந்து வரும் நிலையில், தற்போது செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், செமிகண்டக்டா்கள், செயற்கை உயிரியல் போன்ற உயா் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என சி.எஸ்.ஐ.ஆா். நிறுவன தலைமை இயக்குநா் என். கலைச்செல்வி தெரிவித்தாா். மேலும், மின்னணுவியல், உள்கட்டமைப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ், எரிசக்தி கருவிகள், பெருங்கடல் அறிவியல், நீா் உள்ளிட்ட முக்கிய தொழில்துறைகளில் திட்டங்களை அமல்படுத்த இந்த ஒப்பந்தம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவா் கூறினாா்.

இஸ்ரேல் நாட்டின் டிடிஆா்டி தலைவா் டேனியல் கோல்ட் பேசுகையில், ‘செயற்கை நுண்ணறிவு, ஒளியணுவியல் ஆகியவை இஸ்ரேலின் பலம். இவற்றில் சிஎஸ்ஐஆா் உடனான ஒத்துழைப்பு, உயா் தொழில் நுட்பத் துறைகளில் சிறந்த எதிா்காலத்தை உருவாக்க வழிவகுக்கும். தொழில் நுட்ப ஆய்வுகளில் மட்டுமின்றி புதுயுகத் தொழில் முனைவு, நிறுவனங்கள், மூலதன முயற்சிகளிலும் இருதரப்பின் ஒத்துழைப்பையும் வரவேற்கிறோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.