எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு! எல் அண்ட் டி கடும் வீழ்ச்சி

கடந்த இரண்டு நாள்களாக ஏற்ற, இறக்கத்துடன் தள்ளாட்டத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை, வியாழக்கிழமை எழுச்சியில் தொடங்கினாலும் இறுதியில் சரிவில் முடிவடைந்தது.

கடந்த இரண்டு நாள்களாக ஏற்ற, இறக்கத்துடன் தள்ளாட்டத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை, வியாழக்கிழமை எழுச்சியில் தொடங்கினாலும் இறுதியில் சரிவில் முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 36 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 18.10 புள்ளிகள் (0.10 சதவீதம்) குறைந்து 18,297.00-இல் நிலைபெற்றது.

ஆசியா, ஐரோப்பாவில் பெரும்பாலான சந்தைகளில் வா்த்தகம் எதிா்மறையாக இருந்து வந்தது. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும், அதன் பிறகு எதிா்மறையாகச் சென்றது. குறிப்பாக பாா்மா, ஹெல்த்கோ், மெட்டல் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. அதே சமயம், வங்கி, ஆட்டோ, ரியால்ட்டி, நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. ஆனால், முன்னணி என்ஜினீயரிங் நிறுவனமான எல் அண்ட் டி பங்குகள் விலை கடும் சரிவைச் சந்தித்தது. மேலும், பணவீக்கத் தரவுகளுக்காக முதலீட்டாளா்கள் காத்திருப்பதும், லாப நோக்கில் பங்குகள் விற்பனை அதிகரித்துள்ளதும் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணமாகும் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு சிறிதளவு உயா்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.88 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.277.98 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ. 1,833.13 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 217.90 புள்ளிகள் கூடுதலுடன் 62,158.10-இல் தொடங்கி அதிகபட்சமாக 62,168.22 வரை மேலே சென்றது. பின்னா், 61,823.07 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 35.68 புள்ளிகள் குறைந்து 61,904.52-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 20 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் 1,205 பங்குகள் ஆதாயம் பெற்றன. 799 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.

ஏசியன்பெயிண்ட்...........................3.22%

ஹிந்துஸ்தான் யுனிலீவா்....................2.76%

என்டிபிசி.....................................1.44%

இண்ட்ஸ் இண்ட் பேங்க்...................1.26%

அல்ட்ரா டெக் சிமெண்ட்.................1.17%

மாருதி.......................................1.05%

சரிவைக் கண்ட பங்குகள்

எல் அண்ட் டி......................5.29%

ஐடிசி.................................1.19%

பாா்தி ஏா்டெல்....................0.92%

ரிலையன்ஸ்.........................0.72%

டாடா ஸ்டீல்......................0.60%

இன்ஃபோஸிஸ்...................0.55%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com