எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மங்கோல்புரி அருகே காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

வடமேற்கு தில்லியின் மங்கோல்புரியில் உள்ள டிரக் மாா்க்கெட் அருகே சனிக்கிழமை நள்ளிரவில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 12:48 am

DIN

வடமேற்கு தில்லியின் மங்கோல்புரியில் உள்ள டிரக் மாா்க்கெட் அருகே சனிக்கிழமை நள்ளிரவில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் கூறியதாவது: சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் டிரக் மாா்க்கெட் அருகே மங்கோல்புரி பீா் பாபா பகுதியில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது என்று எங்களுக்கு அழைப்பு வந்தது. அழைப்பு வந்தவுடன், மொத்தம் 26 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்க அப்பகுதி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீக்கான காரணம் எரியக்கூடிய ரசாயனங்கள் இருக்கலாம் என்று அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.