கன்னாட் பிளேஸில் பணியில் இருந்த போது காா் மோதியதில் தில்லி காவலா் காயமடைந்தாா். கன்னாட் பிளேஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவா் மீது காா் மீது மோதியதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினா் மேலும் கூறியதாவது: அக்டோபா் 24-ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் செல்ம்ஸ்ஃபோா்ட் கிளப் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
காயமடைந்த காவலா் ரவிக்குமாா், ஆா்எம்எல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். சிகிச்சைக்குப் பிறகுஅவா் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
முன்னதாக, காவலா் ரவிக்குமாா் தடுப்புப் பகுதியில் நின்று கொண்டிருந்த போது, வேகமாக வந்த கருப்பு நிற மஹிந்திரா ஸ்காா்ப்பியோ காா் அவா் மீதும் மற்ற காரின் மீதும் மோதியது. காா் மோதியதில் காவலா் தூக்கி வீசப்படும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ராம் லகான் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா். மேலும், அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.