50 வயதுக்குட்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு: 30 ஆண்டுகளில் 79% அதிகரிப்பு 

கடந்த 30 ஆண்டுகளில் 50 வயதுக்கு குறைவானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது 79 சதவீதம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. 
50 வயதுக்குட்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு: 30 ஆண்டுகளில் 79% அதிகரிப்பு 
Updated on
1 min read

கடந்த 30 ஆண்டுகளில் 50 வயதுக்கு குறைவானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது 79 சதவீதம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. 
இதுதொடர்பாக பிரிட்டிஷ் மருத்துவ இதழில் (புற்றுநோயியல்) வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 1990-ஆம் ஆண்டு உலக அளவில் பல்வேறு வகையானா புற்றுநோயால் 50 வயதுக்கு குறைவானவர்களில் 18.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனார். இது 2019-ஆம் ஆண்டு 38.2 லட்சமாக அதிகரித்தது. இதே காலகட்டத்தில் 50 வயதுக்கு குறைவானவர்கள் புற்றுநோயால் உயிரிழப்பது 28 சதவீதம் அதிகரித்துள்ளது. 

2019-ஆம் ஆண்டில், மார்பகப் புற்றுநோயால்தான் 50 வயதுக்கு குறைவானவர்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால், 1990-ஆம் ஆண்டு முதல் அந்த வயதுக்குட்பட்டவர்கள் மேல் தொண்டை மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. 

1990 முதல் 2019-ஆம் ஆண்டு வரை, ஆண்டுதோறும் 50 வயதுக்குட்பட்டவர்கள் மேல் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்படுவது 2.28 சதவீதமும், ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுவது 2.23 சதவீதமும் அதிகரித்துள்ளது. 

அதேவேளையில், அந்த வயதுக்குட்பட்டவர்கள் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவது 2.88 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியா உள்பட 204 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 29 வகையான புற்றுநோய்கள் குறித்து, உலக அளவில் நோய்ச் சுமை அறிக்கை 2019-இல் இடம்பெற்ற புள்ளிவிவர ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, பிரிட்டிஷ் மருத்துவ இதழில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது . 

இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது:
இந்தியா போன்ற நாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதும், நோயைக் கண்டறிவதற்கான மருத்துவ வசதிகள் இருப்பதும் முக்கிய காரணம். 

அதேவேளையில் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணங்கள், உணவுப் பழக்கம், உடல் உழைப்பு குறைந்தது ஆகிய காரணங்களையும் புறந்தள்ளிவிட முடியாது. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவது குறைந்ததற்கு உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தில், ஹெபடைடிஸ்-பி தடுப்பூசியின் அறிமுகம் முக்கியப் பங்காற்றியுள்ளது. ஆனால், மதுப் பழக்கம் இல்லாத நிலையில், கல்லீரலில் கொழுப்பு சேரும் பாதிப்பால் கல்லீரல் புற்றுநோய் வரலாம். செரிமான மண்டலங்களில் புற்றுநோய் வருவதும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com