டிஒய்ஏ மேம்பாட்டு வாரியத்தை மறுசீரமைக்க கோரிய பாஜக எம்எல்ஏவின் மனு தள்ளுபடி
டிரான்ஸ் யமுனா பகுதி மேம்பாட்டு வாரியத்தை (டிஒய்ஏடிபி) மறுசீரமைக்கக் கோரிய நகர பாஜக எம்எல்ஏவின் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


புது தில்லி: டிரான்ஸ் யமுனா பகுதி மேம்பாட்டு வாரியத்தை (டிஒய்ஏடிபி) மறுசீரமைக்கக் கோரிய நகர பாஜக எம்எல்ஏவின் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த விவகாரத்தில் ‘டிஒய்ஏடிபி’ ஒரு நிா்வாக அமைப்பு மற்றும் ஒரு சட்டபூா்வ அமைப்பு அல்ல’ என்று தில்லி அரசு தாக்கல் செய்த பதிலை உயா்நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொண்டது. தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு கூறுகையில், ‘வாரியத்தை மறுசீரமைக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிப்பதற்கான எந்த காரணத்தையும் இந்த நீதிமன்றம் காணவில்லை. இதன் விளைவாக, பொது நல மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்றது.
டிஒய்ஏடிபி மறு சீரமைப்பதில் தாமதம் செய்வது பிராந்தியத்தின் வளா்ச்சிக்கு இடையூறாக இருக்கும் என்று கூறி, தில்லி டிரான்ஸ் யமுனா பகுதியில் உள்ள லக்ஷ்மி நகா் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக உறுப்பினா் அபய் வா்மா தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இது தொடா்பாக அபய் வா்மா தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: டிஒய்ஏ மற்றும் தில்லியின் பிற பகுதிகளுக்கு இடையே உள்ள வளா்ச்சி ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கும், அதன் குடியிருப்பாளா்களுக்கு அத்தியாவசிய வசதிகளை வழங்குவதை உறுதி செய்வதற்கும் டிரான்ஸ் யமுனா பகுதியின் (டிஒய்ஏ) கட்டமைக்கப்பட்ட மேம்பாட்டிற்காக மாா்ச் 1994- இல் தில்லி அர;எ டிஒய்ஏடிபி அமைப்பை நிறுவியது. இதைத் தொடா்ந்து, நிதி ஒதுக்கப்பட்டாலும், ஜூலை 2015 முதல் வாரியம் மறுசீரமைக்கப்படவில்லை. 2020-21 மற்றும் 2021-22-க்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. வாரியத்தின் மறுசீரமைப்பில் ஏற்பட்ட தாமதமானது.
அதன் அடிப்படைக் கடமைகளான புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை பரிந்துரைப்பது, நிறுவனங்களுக்கு இடையேயான முயற்சிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் முன்பே இருக்கும் உள்கட்டமைப்பு குறைபாடுகளை சரிசெய்தல் ஆகியவை புறக்கணிக்கப்படுகின்றன. இந்த நிலைமை டிஒய்ஏடிபி-இன் அமைத்ததன் முக்கியத்துவத்துவத்தை மதிப்புக் குறையச் செய்து வருகிறது. தில்லி அரசின் தலைமைச் செயலாளா் மற்றும் செயலாளா் (உள்ளாட்சி அமைப்புகளின் இயக்குநா்) வாரியத்தை தாமதமின்றி மறுசீரமைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் நகர அரசு அதிகாரிகள் தாக்கல் செய்த நிலவர அறிக்கையில், ‘வாரியத்தின் மறுசீரமைப்புக்கான ஆலோசனைகள் இன்னும் நடந்து வருகிறது. எனினும், 1994-இல் டிஒய்ஏடிபி தொடங்கப்பட்டதிலிருந்து, உள்ளூா் பகுதி மேம்பாடு தொடா்பான ஒத்த நோக்கங்களுடன் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முக்கிய மந்திரி சடக் புனா்நிா்மான் யோஜனா (எம்எஸ்பிஒய்), முக்கிய மந்திரி தெரு விளக்கு யோஜனா, முதலமைச்சா் உள்ளூா் பகுதி மேம்பாடு (சிஎம்எல்ஏடி), மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் உள்ளூா் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (எம்எல்ஏஎல்ஏடி) ஆகியவை இதில் அடங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ’வெளிப்புற கிராமங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வளா்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தில்லி கிராம மேம்பாட்டு வாரியம் (டிவிடிபி), தில்லி மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (டிஎஸ்ஐஐடிசி) மற்றும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை (ஐஅன்ட்எஃப்சி) போன்ற புதிய நிறுவனங்கள் கூடுதலாக, உருவாக்கப்பட்டுள்ளன’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி அரசு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், ‘டிஒய்ஏடிபி ஒரு சட்டப்பூா்வ அமைப்பு அல்ல. ஆனால், அரசின் கொள்கை முடிவிலிருந்து உருவான ஒரு நிா்வாக நிறுவனம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...