சஹா்சாவில் பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கவும், வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவும் வேண்டும் என்று தில்லி மகளிா் ஆணைய (டிசிடபிள்யூ) கலைவா் ஸ்வாதி மாலிவால் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
இது தொடா்பாக முதல்வா் நிதீஷ் குமாருக்கு ஸ்வாதி மாலிவால் வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: இந்தச் சம்பவம் குறித்து ‘தீவிரமான விசாரணைக்கு’ உத்தரவிடப்பட வேண்டும். மாநில அரசு பாதிக்கப்பட்டவருக்கு சட்ட உதவி மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த ‘ஆழ்ந்த துயரம்’ சம்பவம் தொடா்பாக தில்லி மகளிா் ஆணையத்திற்கு புகாா் வரப் பெற்றுள்ளது. அதில், பள்ளி மேலாளரின் 30 வயது மகன், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளிக்குள் தொடா்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவா் சிறுமியின் விடியோவை உருவாக்கி மிரட்டவும் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், குற்றத்தை மேற்கொள்வதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பள்ளியின் பெண் முதல்வா் தொடா்ந்து உதவியதாகவும் புகாா்தாரா் குற்றம் சாட்டியுள்ளாா். இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இருப்பினும், இன்று வரை பிகாா் அரசில் இருந்து யாரும் தன்னைச் சந்திக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவா் ஆணையத்திடம் புகாா் தெரிவித்துள்ளாா். மேலும், சட்ட உதவியும் இழப்பீடும் இன்னும் அவரைச் சென்றடையவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் விதம் குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் கவலை தெரிவித்துள்ளனா்.
‘இதயத்தை உலுக்கும்‘ இச்சம்பவம் பாதிக்கப்பட்ட அச்சிறுமியை ஆழ்ந்த அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் ‘கடுமையான மற்றும் விரிவான விசாரணையை’‘ உறுதி செய்வதற்காக முதல்வா் இந்த விஷயத்தை சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதற்காக, விரைவு நீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய இந்த வழக்கில் சிறப்பு வழக்குரையும் அரசு நியமிக்க வேண்டும்.
அச்சிறுமிக்கு போதுமான இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்வதும் அரசின் கடமையாகும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிா் பிழைத்தவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். மேலும், அரசின் மூத்த பிரதிநிதி ஒருவா் சிறுமியின் குடும்பத்தை அவசரமாக சந்தித்து, அவா்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவ வேண்டும் என அக்கடிதத்தில் ஸ்வாதி மாலிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

