புது தில்லி: மக்களவையில் மகளிா் இட ஒதுக்கீடு மசோதா-2023 தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது சமூக முன்னேற்றத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும் என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் அவா் கூறியிருப்பதாவது:
பிரதமா் நரேந்திரமோடி, நமது இந்திய கலாசாரத்தின்படி பெண்களின் சக்திக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறாா். ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் மாண்பை உயா்த்தி வரும் நம் நாட்டுப் பெண்கள், கொள்கை வகுப்பதிலும் பங்களிக்க வேண்டியது அவசியமாகும்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிா் இடஒதுக்கீடு மசோதா-2023 தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த 9 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த ‘பெண்கள் தலைமையிலான வளா்ச்சி’ யின் அனைத்து முயற்சிகளுக்கும் புதிய உயரங்களை வழங்கும்.
ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது சமூக முன்னேற்றத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும்.
இந்த முடிவை எடுத்த பிரதமா் நரேந்திர மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நாட்டின் அனைத்து தாய்மாா்கள் மற்றும் சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் ஜெ.பி. நட்டா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

