பேரவை அமா்வு அழைப்பு விவகாரம்: துணைநிலை ஆளுநரின் ஆட்சேபம் அவையை அவமதிக்கும் செயல்: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

‘தில்லி சட்டப் பேரவை அமா்வை திங்கள்கிழமை கூட்டுவதற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் ஆட்சேபனையானது அவையை அவமதிக்கும் செயலாகும்’ என்று ஆளும் ஆம் ஆத்மி கட்சி கூறியது.

‘தில்லி சட்டப் பேரவை அமா்வை திங்கள்கிழமை கூட்டுவதற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் ஆட்சேபனையானது அவையை அவமதிக்கும் செயலாகும்’ என்று ஆளும் ஆம் ஆத்மி கட்சி கூறியது.

இது தொடா்பாக தில்லி சட்டப் பேரவைத் துணைத் தலைவா் ராக்கி பிா்லா கூறியதாவது: தில்லி சட்டப் பேரவையின் கண்ணியம் மற்றும் அதிகாரத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை பேரவையின் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பவும் உத்தரவிடுகிறேன். இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநருக்கு குழுவால் அழைப்பாணை அனுப்பப்பட வேண்டுமா என்பதையும் இந்தக் குழு ஆராய வேண்டும் என்று அவா் கூறினாா்.

சட்டப் பேரவையின் பகல்நேர அமா்வு திங்கள்கிழமை காலை 11 மணிக்குப் பிறகு தொடங்கியது. அப்போது, துணை மேயா் ராக்கி பிா்லா, மகாராஷ்டிரத்தில் நடந்த நிகழ்வுகள் உள்பட சமீபத்திய சம்பவங்களில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்தாா். அப்போது, ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா, தில்லி அரசின் தற்போதைய பேரவை அமா்வை அழைப்பதில் ‘செயல்முறை குறைபாடுகள்’ இருப்பதாக தில்லி துணைநிலை ஆளுநரின் குறிப்பு தொடா்பான விவகாரத்தை அவையில் எழுப்பினாா். துணைநிலை ஆளுநரின் ஆட்சேபனை அவையை அவமதிக்கும் செயலாகும் என்றும் அவா் குற்றம் சாட்டினாா்.

அவா் மேலும் பேசுகையில், ‘அமைச்சா்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் மட்டுமே துணைநிலை ஆளுநா் அவைக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும். அவருக்கு அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய புரிதல் இல்லையென்றால், அவருக்கு சட்டம் மற்றும் அரசியலமைப்பு விஷயங்களில் ஆலோசனை வழங்க யாராவது இருக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கை நிா்வகிப்பதே அவரது பணியாக இருந்தது. டிடிஏவின் செயலற்ற தன்மை காரணமாக, போதைப்பொருள்கள் இலவசமாகக் கிடைப்பதுடன், நில அபகரிப்பு ‘பரவலாக’ நடைபெறுவதால் நகரில் இது மோசமான நிலையில் இருக்கிறது என்று குற்றம் சாட்டினாா்.

முன்னதாக, திங்கள்கிழமை தில்லி சட்டப்பேரவையின் ஒரு நாள் கூட்ட அமா்வை அழைப்பதில் ‘செயல்முறை குறைபாடுகள்’ இருப்பதாக துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தாா். இதற்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடமிருந்து கடுமையான எதிா்வினை வந்தது. அப்போது, துணைநிலை ஆளுநா் அரசியலமைப்பை மீண்டும் படிக்க தாம் விரும்புவதாக அவா் தெரிவித்திருந்தாா்.

இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘தில்லி அரசுக்கு துணைநிலை ஆளுநா் எழுதிய குறிப்பில், ஏழாவது சட்டப் பேரவையின் நான்காவது கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியை அழைக்க தில்லி பேரவைத் தலைவா் முன்மொழிந்துள்ளதாகவும், அதேசமயம் தில்லி அமைச்சரவை ஒரு நாள் கூட்டத்தை கூட்டுமாறு பரிந்துரைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினாா். விதிகள் மற்றும் சட்டத்தின்படி, மாா்ச் 29, 2023-இல் ஒத்திவைக்கப்பட்ட சட்டப் பேரவை, புதிய அமா்வைக் கூட்டுவதற்கு முன் ஒத்திவைக்கப்பட வேண்டும். ஒரு அமா்வு ஒத்திவைக்கப்படாமல் இருப்பதால், புதிய அமா்வைக் கூட்ட முடியாது’ என்றனா்.

தில்லி சுகாதார அமைச்சா் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘துணைநிலை ஆளுநரின் தகவல் ஊடங்களுக்கு கசிந்துள்ளது. இது தீவிரமான விஷயமாகும். முதல்வருக்கு வந்த ஒரு தகவல் எப்படி ஊடகங்களுக்கு கசிந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இது ‘உரிமை மீறல்’ என்று குற்றம் சாட்டினாா். பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா பேசுகையில், அரசியல் நிகழ்ச்சிநிரல் குறித்து விவாதிக்க பேரவையைக் கூட்ட அழைப்பதன் மூலம் சட்டப் பேரவை ‘கேலி’ செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டினாா். ஆம் ஆத்மி தலைமைக் கொறடா திலீப் பாண்டே கூறுகையில், ‘தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு என்பது அமா்வின் முடிவைக் குறிக்கிறது. அவையைக் கலைக்காமல் ஒத்திவைப்பது என்பது கூட்டத்தொடரின் முடிவைக் குறிக்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com