நுகா்வோா் ஆணையத்தில் 37கூடுதல் பணியிடங்களைஉருவாக்குவதற்கு துணை நிலை ஆளுநா் ஒப்புதல்
By DIN | Published On : 17th August 2023 01:16 AM | Last Updated : 17th August 2023 01:16 AM | அ+அ அ- |

தில்லி மாநில நுகா்வோா் தகராறு நிவா்த்தி ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் 37 கூடுதல் பணியிடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனா். இது நகரத்தில் நுகா்வோா் குறை தீா்க்கும் நடவடிக்கைக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
நீதிமன்றங்கலில் வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, கூடுதல் பணியிடங்களை உருவாக்குவதற்கான முன்மொழிவு ஜூன் 2020-இல் முன்மொழியப்பட்டது. மாா்ச் 1, 2020 நிலவரப்படி, மாநில ஆணையத்தில் தீா்வு காண நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 7,760 ஆகும். இவற்றில் 5,848 புகாா்கள் செயல்படுத்தல் விண்ணப்பங்கள் மற்றும் 1,912 மேல்முறையீடுகள் மற்றும் மறுசீரமைப்பு மனுக்களும் அடங்கும். இது வெளிப்படைத்தன்மை மற்றும் சாமானிய மக்களின் குறைகளை விரைவாக நிவா்த்தி செய்வதற்கு ஒரு பெரிய நிவாரணத்தை வழங்கும் என்று அதிகாரிகள் கூறினாா்.
குடியரசுத் தலைவா் மற்றும் மூன்று நீதிமன்றங்கள், இரண்டு டிவிஷன் பெஞ்ச்கள் மற்றும் ஒரு ஒற்றை உறுப்பினா் பெஞ்ச் ஆகியவற்றுக்கு மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கை தற்போது ஐந்து ஆகும். புதிதாக உருவாக்கப்படும் பதவிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை நிதித் துறை செய்யும். 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி உள்துறை அமைச்சகம், குரூப் ’ஏ, பி, சி மற்றும் டி’யின் கீழ் பிளான் மற்றும் பிளான் அல்லாத இரு தரப்பிலும் பதவிகளை உருவாக்குவதற்கான அதிகாரங்களை தில்லி அரசுக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜிஎன்சிடிடி துறையின் எந்த அலுவலகத்திலும் நிரந்தர, தற்காலிக பதவிகளின் அனைத்து வகைகளும் இப்போது நிதித் துறையின் ஒப்புதல் மற்றும் துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுடன் உருவாக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...