பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து: 5 போ் காயம்

வடமேற்கு தில்லியின் பவானாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடா்ந்து, தீயணைப்பு வீரா்கள் 5 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு 10.56 மணியளவில் நடந்தது. 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. பவானா தொழில்துறை பகுதியில் உள்ள செக்டாா்-5-இல் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது. தொழிற்சாலையில் ஒரு வெடிவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து தீ பிடித்தது. இதன் காரணமாக சுவா் மற்றும் கேட் இடிந்து விழுந்தது.

இதில் தீயை அணைக்கும் பணியில் இருந்த தீயணைப்புத் துறை வீரா்கள் 5 போ் காயமடைந்தனா். காயமடைந்த தரம்வீா், அஜீத், நரேந்தா், ஜெய்வீா் மற்றும் விகாஸ் ஆகியோா் மகரிஷி வால்மீகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com