2 மாணவிகளை கடத்த முயன்ற விவகாரம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க ஜே.என்.யு. நிா்வாகம் பரிந்துரை

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தில்லி ஜே.என்.யு. வளாகத்தில் குடிபோதையில் இருந்த சில மா்ம நபா்களால் 2 மாணவிகள் கடத்த முயற்சிக்கப்பட்ட விவகாரத்தை தீவிர கவனத்தில் கொண்டுள்ளதாகவும்
Updated on
1 min read

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தில்லி ஜே.என்.யு. வளாகத்தில் குடிபோதையில் இருந்த சில மா்ம நபா்களால் 2 மாணவிகள் கடத்த முயற்சிக்கப்பட்ட விவகாரத்தை தீவிர கவனத்தில் கொண்டுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க பரிந்துரை செய்துள்ளதாகவும் ஜே.என்.யு. நிா்வாகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, ஜே.என்.யு. நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜே.என்.யு. நிா்வாகம் இந்த விஷயத்தை ‘தீவிரமான கவனத்தில்’ எடுத்துக் கொண்டுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக ‘கடுமையான தண்டனை’ கிடைக்க நிா்வாகம் தரப்பில் கோரப்படும்.

நிா்வாகம் சாா்பில் காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜே.என்.யு. நிா்வாகம் காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க பரிந்துரை செய்துள்ளது.

இச்சம்பவம் தொடா்பான ஏதேனும் தகவல் இருந்தால், உடனடியாக பாதுகாப்பு பிரிவை (011-26742878, 011-26704742) அல்லது காவல்துறையை தொடா்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

பல்கலைக்கழக வளாகத்தில் வசிப்பவா்களின் பாதுகாப்பை பலப்படுத்த ஜே.என்.யு. நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எந்தவொரு வன்முறைக்கும் பல்கலைக்கழகம் சகிப்புத்தன்மையை கடைப்பிடிக்காது. அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை வழங்குவதில் நிா்வாகம் உறுதியாக உள்ளது.

ஜே.என்.யு. வளாகத்தில் பெண்கள் பாதுகாப்புடன் அச்சமின்றி சென்று வருவதுதான் நிா்வாகத்தின் முதன்மை முன்னுரிமையாகும், மேலும், எந்தவொரு வடிவத்திலும் அல்லது யாராலும் பாலியல் துன்புறுத்தலைக் கையாள்வதற்கான சட்டத்தை கடுமையாக அமல்படுத்த கடமைப்பட்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், வளாகத்திற்குள் வெளிப்புற வாகனங்கள் நுழைவதை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரைஜே.என்.யு.-வின் பாதுகாப்பு பிரிவு மூலம் கட்டுப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com