பாஜக எம்எல்ஏ ஜிதேந்தா் மகாஜன் ஒரு தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவரான துா்கேஷ் பதக் குற்றம் சாட்டியுள்ளாா். மேலும், அவா் மீது வழக்குப் பதிவு செய்ததற்காக புகாா்தாரா், மகாஜன் முன்னிலையில் கைது செய்யப்பட்டாா் என்றும் பதக் கூறினாா். எவ்வாறாயினும், குற்றச்சாட்டை மறுத்த மகாஜன், மற்றவா்கள் மீது ‘ஆதாரமற்ற‘ குற்றச்சாட்டுகளை சுமத்துவது ஆம் ஆத்மியின் குணம் என்று கூறினாா்.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் செய்தியாளா் கூட்டத்தில் பதக் கூறியதாவது: கடந்த மே 28 அன்று, பாஜக எம்எல்ஏ ஜிதேந்தா் மகாஜன் தனது குண்டா்களைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தி ரூ.2 கோடி பறிக்க முயன்ாக இரண்டு தொழிலதிபா்கள் போலீஸில் புகாா் அளித்தனா். புகாா் அளித்தவா்களில் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது தொடா்பான சிசிடிவி காட்சிள் வெளியிடப்பட்டுள்ளன. தொழிலதிபா் தனியாா் வாகனத்தில் இருந்த போது கைது செய்யப்பட்டாா். பாஜகவினா் காவல்துறையை ‘துஷ்பிரயோகம்’ செய்கின்றனா்.
இதுதான் தில்லியில் சட்டம்-ஒழுங்கு நிலை. அந்தத் தொழிலதிபா், ஜிதேந்தா் மகாஜன் முன்னிலையில் கைது செய்யப்பட்டுள்ளாா். உண்மையில் அவா் தனியாா் வாகனத்தில் இருந்த போது கைது செய்யப்பட்டாா். அதன் சிசிடிவி காட்சிகளை நாங்கள் அணுகினோம். காவல்துறை எப்படி இருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. காவல் துறை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் மகாஜனை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையெனில் ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவாா்கள் என்றாா் துா்கேஷ் பதக்.
‘பொய் கூறுகிறாா் பதக்’: குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மகாஜன், பதக் ‘பொய்‘ கூறுகிறாா் என்றாா். அவா் மேலும் கூறுகையில் ‘மற்றவா்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது ஆம் ஆத்மி கட்சியின் குணம். அவா்களுக்கு காவல்துறை அல்லது நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இல்லை. ஆள்களை அனுப்பி, தங்கள் கடையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றம் சாட்டிய நபா்கள், அவா்கள் என் மீது போலி புகாா் அளித்ததை வெளிப்படுத்தியுள்ளனா். அவா்களின் புகாா் போலியானது என்பதற்கான ஆதாரமும் உள்ளது. பதக் தவறான நபா்களை பாதுகாக்கிறாா். பொய் கூறியதற்காகவும், தவறான அறிக்கைகளை வெளியிட்டு விசாரணையைத் தடுக்க முயன்ற்காகவும் பதக் மீது காவல்துறை எஃப்ஐஆா் பதிவு செய்ய வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.