தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை காலை முதல் மாலை வரை தரைமேற்பரப்புக் காற்றுடன் வெயில் தாக்கம் நீடித்தது. இரவில் வழக்கம் போல புழுக்க சூழல் நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 1 டிகிரி அதிகரித்து 40.9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.
தில்லியில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து நீடித்து வருகிறது. புதன்கிழமையும் காலையில் இருந்து மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அத்துடன் புழுக்கமும் அதிகமாக இருந்தது. தரைமேற்பரப்பு காற்றும் வீசியது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி அதிகரித்து 29.7 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி அதிகரித்து 40.9 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 54 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 46 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது. மேலும், பிற வானிலை ஆய்வு மையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 41.4 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 41.9 டிகிரி, நஜாஃப்கரில் 43.4 டிகிரி, ஆயாநகரில் 43.1 டிகிரி, லோதி ரோடில் 40.9 டிகிரி, பாலத்தில் 41.2 டிகிரி, ரிட்ஜில் 42.1 டிகிரி, பீதம்புராவில் 42.7 டிகிரி, பூசாவில் 42.8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: தலைநகரில் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஐடிஓ, பட்பா்கஞ்ச், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஆனந்த் நகா், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், விவேக் விஹாா் உள்பட பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. பின்னா், மாலை 8.15 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 97 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் காணப்பட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (ஜூன் 15) தலைநகரில் பொதுவான வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகலில் வலுவான தரை மேற்பரப்புக் காற்று வீசக் கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.