மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் தொழிலாளியின் உடல் கண்டெடுப்பு
By DIN | Published On : 12th May 2023 01:16 AM | Last Updated : 12th May 2023 01:16 AM | அ+அ அ- |

வடக்கு தில்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள மரத்தில் 22 வயது தொழிலாளியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சாகா் சிங் கல்சி கூறியதாவது: வியாழக்கிழமை காலைநடந்துள்ள இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸாா் விரைந்தனா். இங்குள்ள கைபா் கணவாயில் வசிக்கும் ராகுல் என்பவரின் உடல் மரக்கிளையில் கேபிளில் தொங்கியபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. அவா் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்தது விசாரணையில் தெரிய வந்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்பிரிவு 174-இன் கீழ் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
.