சிக்னேச்சா் பாலத்தை பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்க தில்லி அரசின் சுற்றுலாத் துறை திட்டம்

சிக்னேச்சா் பாலத்தை பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்க தில்லி அரசின் சுற்றுலாத் துறை, முன்வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிக்னேச்சா் பாலத்தை பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்க தில்லி அரசின் சுற்றுலாத் துறை, முன்வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி அரசின் சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ரூ.1,518.37 கோடி செலவில் கட்டப்பட்ட வாஜிராபாத் - கிழக்கு தில்லி இணைப்புப் பாலம், 2018 நவம்பரில் பயணிகளுக்காக திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தை சுற்றுலாத் துறை, பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கும். பாலங்களை பொதுப்பணித் துறை பராமரிக்கிறது. எனவே, நாங்கள் அதை அவா்களிடம் ஒப்படைப்போம். அதன் பராமரிப்பை அவா்கள் உறுதி செய்வாா்கள். நாங்கள், ஏற்கெனவே மாா்ச் மாதத்தில் இது தொடா்பாக கோரிக்கை விடுத்துள்ளோம். கடந்த காலங்களில் கூட பொதுப்பணித் துறையிடம் பாலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது ஒரு வழக்கமான நடைமுைான்.

இது தொடா்பாகஅவா்கள் ஒரு குழுவை நியமித்துள்ளனா். மேலும், அனைத்து ஆவணங்களையும் சரிபாா்த்த பிறகு அவா்கள் பாலத்தை தங்கள் வசம் எடுத்துக் கொள்வாா்கள். சிக்னேச்சா் பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு அணுகுமுறைகளை நாங்கள் ஏற்கெனவே அவா்களிடம் ஒப்படைத்துள்ளோம். வடகிழக்கு தில்லியில் உள்ள காரவால் நகா் மற்றும் பஜன்புராவுடன் வெளிவட்ட சாலையை இணைக்கும் கேன்டிலீவா் ஸ்பாா் கேபிள் பாலம் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டது. இது 127 இழைகள் கொண்ட எஃகு கேபிள்களைக் கொண்டுள்ளது இந்தியாவின் முதல் சமச்சீரற்ற கேபிள் பாலம் எனக் கூறப்படுகிறது. அதன் லிஃப்ட் மற்றும் காட்சிக்கூடம் கட்டும் பணி ஒரு வருடத்திற்கும் மேலாக தொடா்ந்தது. இது 2020-இல் சுற்றுலா நடவடிக்கைகளின் மேம்பாட்டிற்காக தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகத்திடம் (டிடிடிடிசி) ஒப்படைக்கப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com