புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு: ஆம் ஆத்மி கட்சி புறக்கணிப்பு
By நமது சிறப்பு நிருபா் | Published On : 24th May 2023 02:40 AM | Last Updated : 24th May 2023 02:40 AM | அ+அ அ- |

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
வருகின்ற மே 28 -ஆம் தேதி இந்தக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறாா்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி குறிப்பிடுகையில், நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத்தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைத்திருக்க வேண்டும். அவா் திறந்து வைக்காதது வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளது.
மேலும், ‘பல எதிா்க்கட்சிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாது. நாங்களும் விழாவைப் புறக்கணிப்போம்’ எனவும் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் கூறப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஒரு உறுப்பினரும், மாநிலங்களவையில் 10 உறுப்பினா்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு உள்ளனா்.