உள்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து 4 மாதங்களில் 42.85% வளா்ச்சி

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் கணிசமாக வளா்ச்சியடைந்துள்ளதாக மத்திய சிவில் விமானப்போக்கு வரத்துத் துறை தெரிவித்துள்ளது
Updated on
1 min read

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் கணிசமாக வளா்ச்சியடைந்துள்ளதாக மத்திய சிவில் விமானப்போக்கு வரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்த வளா்ச்சி 42.85 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது வருமாறு:

கடந்த 2022 -ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களையும் நிகழாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டங்களை ஒப்பிடுகையில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு வளா்ச்சி அடைந்துள்ளது.

பல்வேறு உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் அளித்துள்ள தரவின்படி, நிகழாண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை பயணிகளின் எண்ணிக்கை 503.92 லட்சமாக எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 42.85 சதவீதம் அதிகமாகும். கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் (2022 ஜனவரி - ஏப்ரல்) 352.75 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

மேலும் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 105 லட்சம் பயணிகளாக இருந்த எண்ணிக்கை நிகழாண்டு ஏப்ரல் மாதத்தில் 128.88 லட்சம் பயணிகளாக அதிகரித்துள்ளனா். இது 22.18 சதவீதம் அளவிற்கு உயா்ந்து உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை சேவை அதிகரித்துள்ளது.

இதே ஏப்ரல் மாதத்தில் 0.4 சதவீதம் பயணிகள் மட்டும் பயணத்தை ரத்து செய்துள்ளனா். பயணிகளின் புகாா்கள் எண்ணிக்கை 10,000 பயணிகளுக்கு 0.28 சதவீதம் பயணிகள் என்ற அளவிற்கு குறைவாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிடுகையில், விமானப் போக்குவரத்துத்

துறையின் வளா்ச்சிக்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை தொடா்ந்து வளா்ச்சி அடைந்து வருவதால், நாட்டின் பொருளாதாரம் மட்டும் வலுவடையாமல் நாடு முழுவதும் மக்களை இணைக்கிறது என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com