தில்லியின் மூன்று குப்பைக்கிடங்குகளில் துனைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஆய்வு

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா நகரின் மூன்று குப்பைக் கிடங்குகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் கழிவுகள் அகற்றுதல் பணியை ஆய்வு செய்ததாக

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா நகரின் மூன்று குப்பைக் கிடங்குகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் கழிவுகள் அகற்றுதல் பணியை ஆய்வு செய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் காஜிப்பூா், ஓக்லா மற்றும் பல்ஸ்வா ஆகிய மூன்று இடங்களில் குப்பைக் கிடங்குகள் அமைந்துள்ளன. மே 2024-க்குள் இந்த மூன்று குப்பைக்கிடங்குகளில் சேகரிப்பட்டுள்ள அனைத்து மரபுவழி கழிவுகளையும் அகற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இலக்குகளை விரைவாக எட்டுவதற்கான வழிமுறைகளை ஆய்வின் போது அதிகாரிகளுக்கு ஆலோசனையாக வழங்கினாா்.

தேசியத் தலைநகரில், நகராட்சி திடக்கழிவு மேலாண்மைக்காக நிகழாண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் உயா்மட்டக் குழுவை அமைத்தது. இதைத் தொடா்ந்து, துணை நிலை ஆளுநா் செவ்வாய்க்கிழமை நகரில் உள்ள மூன்று குப்பைக் கிடங்குகளையும் பாா்வையிட்டு, கழிவுகள் அகற்றுதல் பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தாா்.

மே 2022 ஆம் ஆண்டில் மாதத்திற்கு 1.41 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த சராசரி கழிவுகள்அகற்றல் அளவுகோள், அந்த ஆண்டு அக்டோபருக்குள் மாதத்திற்கு 6 லட்சம் மெட்ரிக் டன்னாக உயா்ந்துள்ளது. நாளொன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் மற்றும் மாதத்திற்கு 9 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் மிக விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தில்லியின் துணை நிலை ஆளுநராக வி.கே. சக்சேனா பதவியேற்றபோது, ஜூன் 2022 இல் மூன்று குப்பைக் கிடங்குகளிலும் உள்ள மொத்த கழிவு 229.1 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. தற்போது அது 154.9 லட்சம் மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. அதாவது, ஒரு வருடத்திற்குள் 74.2 லட்சம் மெட்ரிக் டன் (அல்லது 32.38 சதவீதம்) குறைந்துள்ளது.

மேலும், கழிவுகள் அகற்றுவதை கண்காணிக்க குப்பை கொட்டும் இடங்களில் கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து லாரிகளில் ஜிபிஎஸ் இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த ஆய்வின் போது துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவுடன், தலைமைச் செயலாளா், மாநகராட்சி ஆணையா் மற்றும் மூத்த மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com