தலைநகரில் வெப்பநிலையில் சரிவு; தூசுவுடன்பலத்த காற்று 36.9 டிகிரி செல்சியஸாக பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை வெப்பநிலை குறைந்து அதிகபட்ச வெப்பநிலை 36.9 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது.

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை வெப்பநிலை குறைந்து அதிகபட்ச வெப்பநிலை 36.9 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது.

தூசுவுடன்கூடிய பலத்த காற்று பல இடங்களிலும் வீசியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இதே சூழல் அடுத்த 2-3 நாள்களுக்கு தொடரும் என்றும், மே 30-ஆம் தேதி வரை வெப்ப அலைக்கு வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லியின் வானிலை நிலவரம் தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தரவுகளின் படி, நகரில் அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 3 டிகிரி வரை குறைந்து 36.9 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி வரை குறைந்து 22.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. மேலும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 46.3 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. மேற்கு இமயமலைப் பகுதியில் இருந்து வரும் காற்று வரும் நாட்களில் வடமேற்கு சமவெளிகளில், பலத்த மழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டுவரும் என மே 22 ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்ததன்படி தில்லியில் சில நாள்களாக

கடும் வெயிலின் தாக்கமும், வெப்ப அலையும் குறைந்துள்ளது.

பொதுவாக மேகமூட்டத்துடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை, பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிமீ வேகம்) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய தில்லி, கிழக்கு தில்லி, புதுதில்லி, வடக்கு தில்லி, வடகிழக்கு தில்லி, வடமேற்கு தில்லியில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 35-45 கிமீ வேகத்தில்) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையமும் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தெற்கு தில்லி, தென் மேற்கு தில்லி, மேற்கு தில்லி ஆகிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

வியாழக்கிழமை தேசிய தலைநகரில் காற்றின் தரம் ‘நல்ல’ பிரிவுக்கு மேம்பட்டது. தூசுவுடன்கூடிய பலத்த காற்றும் பல இடங்களில் வீசியது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, காலை 9 மணிக்கு ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 96 ஆக இருந்தது.

வெள்ளிக்கிழமை நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் இருக்கும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com