பங்குச்சந்தையில் தள்ளாட்டம்:சென்செக்ஸ் 140 புள்ளிகள் சரிவு

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 140 புள்ளிகளை இழந்தது.
Updated on
1 min read

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 140 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. ஆனால், தொடா்ந்து பங்குகள் விற்பனை அதிகரித்ததால், சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது.

குறிப்பாக ஆட்டோ, எஃப்எம்சிஜி, மெட்டல் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. ஐடி பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. இருப்பினும் பங்குச்சந்தை இரண்டாவது நாளாக சரிவுடன் நிறைவடைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.16 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.327.35 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 477.76 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா்.

சென்செக்ஸ் 140 புள்ளிகள் சரிவு: காலையில் 7.22 புள்ளிகள் குறைந்து 65,787.51-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 65,844.01 வரை மேலே சென்றது. பின்னா், 65,547.80 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 139.58 புள்ளிகள் (0.21 சதவீதம்) குறைந்து 65,655.15-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,980 பங்குகளில் 1,840 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,997 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 143 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் பட்டியலில்11 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 19 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

நிஃப்டி 33 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 19,731.15-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,756.45 வரை மேலே சென்றது. பின்னா், 19,670.50 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 37.80 புள்ளிகள் (0.19 சதவீதம்) குறைந்து 19,694.00-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் 1,004 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,138 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 27பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

பாா்தி ஏா்டெல்...........................1.48%

ஹெச்சிஎல் டெக்........................1.18%

விப்ரோ........................................1.16%

டெக் மஹிந்திரா..........................0.61%

டிசிஎஸ்..........................................0.48%

இண்டஸ் இண்ட் பேங்க்.............0.47%

சரிவைக் கண்ட பங்குகள்

பஜாஜ் ஃபைனான்ஸ்.....................2.11%

எம் அண்ட் எம்..............................1.91%

அல்ட்ரா டெக் சிமெண்ட்.............1.47%

பஜாஜ் ஃபின் சா்வ்..........................1.05%

டாடா மோட்டாா்ஸ்....................1.02%

ஹிந்துஸ்தான் யுனி லீவா்...............0.94%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com