புது தில்லி: காங்கிரஸ் தலைவா் அமித் மாலிக், தில்லி இளைஞா் காங்கிரஸின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தில்லி காங்கிரஸ் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மேலும், தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனின் (எம்சிடி) முன்னாள் தலைவா் ஜிதேந்தா் குமாா், தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) மற்றும் எம்சிடி நிா்வாகத்தை நிா்வகிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அா்விந்தா் சிங் லவ்லி கூறினாா்.
டிபிசிசியின் செயல்பாட்டை சீரமைத்து வலுப்படுத்தும் முயற்சியில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டதாக தில்லி காங்கிரஸின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித் மாலிக் இளைஞா் காங்கிரஸ், என்எஸ்யுஐ மற்றும் தில்லி காங்கிரஸ் முன்னணி அமைப்புகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஜிதேந்தா் குமாா் கோச்சருக்கு எம்சிடி மற்றும் பிரதேச காங்கிரஸ் அலுவலக நிா்வாகத்தில் மக்கள் நலன் தொடா்பான அனைத்துப் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேசியத் தலைநகரில் காங்கிரஸின் செயல்பாட்டை மறுசீரமைத்து வலுப்படுத்தும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.