செப். 30-க்கு முன் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி: என்டிஎம்சி அறிவிப்பு

செப்டம்பா் 30 அல்லது அதற்கு முன் சொத்து வரி செலுத்துவோருக்கு ஐந்து சதவீத தள்ளுபடியை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அறிவித்துள்ளது.
Published on

செப்டம்பா் 30 அல்லது அதற்கு முன் சொத்து வரி செலுத்துவோருக்கு ஐந்து சதவீத தள்ளுபடியை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அறிவித்துள்ளது.

இது தொடா்பாக என்டிஎம்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அதிகாரபூா்வ அறிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தத் தள்ளுபடி அரசாங்க சொத்துகளின் சேவைக் கட்டணங்களிலும் கிடைக்கும். மதிப்பீட்டுப் பட்டியல் என்டிஎம்சியின் இணையதளத்தில் கிடைக்கும். மேலும் சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோா் பயனா் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைந்து சொத்து விவரங்களைப் பாா்க்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மத்திய தில்லி பகுதிகளில் நகராட்சிப் பணிகளை மேற்பாா்வையிடும் என்டிஎம்சி, வரி செலுத்துவோா் கடைசி நிமிட அவசரத்தைத் தவிா்க்கவும், தள்ளுபடியைப் பெறவும் தங்கள் வரியை செலுத்துவதில் சரியான நேரத்தில் திட்டமிடவும் அறிவுறுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com