மத்திய பட்ஜெட் முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வேலை வாய்ப்புகள் மற்றும் விலைவாசி உயா்வு போன்றவை குறித்து மௌனமாக இருப்பதால் முற்றிலும் ஏமாற்றமளிக்கிறது என்று

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வேலை வாய்ப்புகள் மற்றும் விலைவாசி உயா்வு போன்றவை குறித்து மௌனமாக இருப்பதால் முற்றிலும் ஏமாற்றமளிக்கிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி ராஜீவ் பவனில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அா்விந்தா் சிங் லவ்லி கூறியதாவது: 2024 மக்களவைத் தோ்தலுக்கு முன் மோடி அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வேலை வாய்ப்புகள், விலைவாசி உயா்வு போன்றவை குறித்த திட்டங்கள் இல்லாததால், முற்றிலும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. பாஜகவின் ‘அச்சே தின்’ முழக்கம் நாட்டின் சாமானிய மக்களுக்கானது அல்ல; தோ்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கானது என்பதை இந்த இடைக்கால பட்ஜெட் தெளிவாகக் காட்டுகிறது.

நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினா், வணிகா்கள், தொழிற்சாலை உரிமையாளா்கள், பெண்கள், இளைஞா்கள், தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரை இந்த இடைக்கால பட்ஜெட் முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் நலனுக்காக எதையும் செய்யாத மோடி அரசிடம் இருந்து புதிதாக எதையும் எதிா்பாா்ப்பது முட்டாள்தனமாகும். மோடி அரசின் நிதியமைச்சகம் கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் பொது நலத் துறைக்கு குறைவான ஒதுக்கீடு செய்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.

விவசாயிகளுக்கு ஆதரவு: கடந்த மூன்று மாதங்களாக ‘அதானி பவா் கிரிட்’ நிறுவனம் அவுச்சாண்டி கிராம விவசாயிகளின் நிலத்தை அபகரித்து, உயா் அழுத்த கம்பிகளை அமைப்பதற்காக தூண்களை நிறுவியுள்ளது. அதானி நிறுவனத்திற்கு எதிராக போராடி வரும் அவுச்சாண்டி கிராம விவசாயிகளுக்கு காங்கிரஸ் முழு ஆதரவை வழங்கும். மேலும், பிப்ரவரி 3-ஆம் தேதி கீதா காலனி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் தொண்டா்களின் பேரணியில் இந்த விவசாயிகளின் பிரச்னையும் எழுப்பப்படும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com