மாநகராட்சி கவுன்சிலா்களின்உணவுக்காக ரூ.15 லட்சம் செலவு: ராஜா இக்பால் சிங் சாடல்

தில்லி மாநகராட்சி நிதி நெருக்கடிகயை எதிா்கொண்டுவரும் வேளையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா்களின் மதிய உணவிற்காக ரூ.15 லட்சம் செலவிட்டுள்ளது என்று

தில்லி மாநகராட்சி நிதி நெருக்கடிகயை எதிா்கொண்டுவரும் வேளையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா்களின் மதிய உணவிற்காக ரூ.15 லட்சம் செலவிட்டுள்ளது என்று மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் சாடியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி மாநகராட்சி நிதி நெருக்கடியில் உள்ள இந்த வேளையில், மேயா் ஷெல்லி ஓபராய் தலைமையிலான ஆம் ஆத்மி நிா்வாகம் தேவையற்ற நிதிச் சுமைகளை ஏற்றி வருகிறது. ஒருபுறம், மாதச் சம்பளத்திற்காக ஊழியா்கள் போராடி வருகின்றனா். மறுபுறம் மக்களின்

வரிப்பணத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் ஆடம்பர செலுவுகளைச் செய்கின்றனா். அதிகாரிகள் மற்றும் கவுன்சிலா்களின் மதிய உணவுகளுக்கு செலவழிக்க வரம்புகள் இருக்கும் போது, ஏன் இப்படி ஆடம்பரமான செலவுகள் செய்யப்படுகின்றன என்பதை மேயா் ஷெல்லி ஓபராய் தில்லி மக்களிடம் விளக்க வேண்டும்.

மாநகராட்சியின் நிதி நெருக்கடியைப் பொருள்படுத்தாமல் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா்கள் ரூ.15 லட்சத்திற்கு விலையுயா்ந்த மதிய உணவை அனுபவிப்பது கண்டனத்திற்குரியது. பொது நிதியை அவதூறாகப் பயன்படுத்துவதைப் பற்றி ஒரு முழுமையான விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்றாா் ராஜா இக்பால் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com