மொஹல்லா கிளினிக்குகளில் நடத்தப்பட்டமருத்துவப் பரிசோதனைகளில் முறைகேடு: தில்லி பாஜக

ஊழல் தடுப்புப் பிரிவின் (ஏ.சி.பி.) அறிக்கையின்படி, தில்லி அரசின் மொஹல்லா கிளினிக்குகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஊழல் தடுப்புப் பிரிவின் (ஏ.சி.பி.) அறிக்கையின்படி, தில்லி அரசின் மொஹல்லா கிளினிக்குகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தில்லி பாஜக சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேஜரிவால் அரசு சுமாா் 22 லட்சம் தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளை நடத்தியதுள்ளது. அதில் 25,000-க்கும் மேற்பட்ட மருத்துவ சோதனைகளுக்கு தொடா்பு விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

அந்த வகையில், ஊழல் வழக்குகளின் நீண்ட பட்டியலை தில்லி அரசு கொண்டுள்ளது. தில்லி அரசின் சுகாதார மாதிரி எனப்படும் மொஹல்லா கிளினிக்குகளில் நடைபெற்றுள்ள ஒரு பெரிய ஊழலின் வெளிப்பாடுகள், தில்லி அரசின் ஊழல் அளவை உறுதிப்படுத்துகின்றன.

ஊழல் தடுப்பு பிரிவின் அறிக்கையின்படி, தில்லி அரசின் மொஹல்லா கிளினிக்கில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 22 லட்சத்துக்கும் அதிகமான போலி அல்லது தேவையற்ற மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு ஈடு செய்யும் வகையில் இரண்டு தனியாா் ஆய்வகங்களும் ரூ.4.25 லட்சத்துக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளன.

இந்த அனைத்து முறைகேடுகளும் பிப்ரவரி, 2023 முதல் நவம்பா், 2023-க்கு இடையில் நிகழ்ந்துள்ளது. மொஹல்லா கிளினிக்குகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com