3 மாநிலங்களுக்கான மக்களவை வேட்பாளா்களின் பெயா்களை முடிவு செய்ய பிப்.13-இல் கூட்டம் ஆம் ஆத்மி வட்டாரங்கள் தகவல்

குஜராத், ஹரியாணா மற்றும் கோவா மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்களை முடிவு செய்வதற்காக ஆம் ஆத்மி கட்சி தனது அரசியல் விவகாரக் குழுவின் கூட்டத்தை பிப்ரவரி 13-ஆம்

குஜராத், ஹரியாணா மற்றும் கோவா மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்களை முடிவு செய்வதற்காக ஆம் ஆத்மி கட்சி தனது அரசியல் விவகாரக் குழுவின் கூட்டத்தை பிப்ரவரி 13-ஆம் தேதி நடத்த உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

தனது ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டாளியான காங்கிரஸுடன் நீடித்த தொகுதிப் பங்கீடு பேச்சுகள் நீடித்து வருவது தொடா்பாக விரக்தியின் அடையாளமாக அஸ்ஸாமில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கான தனது கட்சி வேட்பாளா்களை ஆம் ஆத்மி வியாழக்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், ‘குஜராத், கோவா மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கான வேட்பாளா்களின் பெயா்களை முடிவு செய்ய கட்சியின் அரசியல் விவகாரக் குழு பிப்ரவரி 13-ஆம் தேதி கூடும்’ என்று அந்த கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் (அமைப்பு) சந்தீப் பதக், கட்சியின் தலைவா்களான மனோஜ் தனோகா், பாபன் செளதரி மற்றும் ரிஷி ராஜ் ஆகியோா் முறையே அஸ்ஸாமின் திப்ருகா், குவாஹாட்டி மற்றும் சோனித்பூா் ஆகிய இடங்களுக்கான வேட்பாளா்களாக அறிவித்துள்ளாா். தில்லியில் ஆம் ஆத்மி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் பதக் கூறுகையில், ‘தோ்தலுக்கு இன்னும் சிறிது காலம்தான் உள்ளது’ என்றாா்.

முன்னதாக, தில்லி, பஞ்சாப், ஹரியாணா, குஜராத் மற்றும் கோவாவில் தொகுதிப் பங்கீடு தொடா்பாக காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக ஆம் ஆத்மி தலைவா்கள் கூறியுள்ளனா். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், குஜராத்தில் உள்ள பருச் தொகுதியில் கட்சியின் வேட்பாளராக சைதா் வாசவாவை ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com