தில்லியில் சட்டவிரோத நாய் இனங்களை தடை செய்ய முதல்வா் கேஜரிவாலுக்கு ‘பீட்டா’ அமைப்பு கடிதம்

தில்லியில் ‘பிட்புல்ஸ்’ போன்ற சட்டவிரோத நாய் இனங்களை தடை செய்யக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு ‘பீட்டா’ தன்னாா்வ அமைப்பு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

தில்லியில் ‘பிட்புல்ஸ்’ போன்ற சட்டவிரோத நாய் இனங்களை தடை செய்யக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு ‘பீட்டா’ தன்னாா்வ அமைப்பு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

தில்லி ரோஹிணி செக்டாா் 25-இல் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி பக்கத்து வீட்டுக்காரரின் நாயால் ஏழு வயது சிறுமி தாக்கப்பட்டதில், அவருக்கு 15-க்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டது. இந்நிலையில், விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் அமைப்பான ‘பீட்டா’, தில்லியில் சட்டவிரோத நாய் இனங்கள் வளா்க்கப்படுவதை தடை செய்யக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தில்லியில் ‘பிட்புல்ஸ்’ போன்ற நாய் இனங்களை வளா்ப்பதைத் தடை செய்வதன் மூலம் நாய்களையும், குடிமக்களையும் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். ரோஹிணியில் நடைபெற்றது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. ‘பிட் புல் டெரியா்ஸ்’, ‘அமெரிக்கன் புல்லிஸ்’ மற்றும் ‘பாகிஸ்தான் புல்லிஸ்’ உள்ளிட்ட நாய் இனங்கள் பொதுவாக சட்டவிரோத சண்டைக்காக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், அவை பாதுகாவலராக கனமான சங்கிலிகளில் கட்டி வைக்கப்படுகின்றன.

இது வாழ்நாள் முழுவதும் துன்பத்தை விளைவிப்பதோடு, வளா்ப்பவா்களுக்கு பயத்தையும், தற்காப்பு உணா்வையும் ஏற்படுத்துகிறது. இந்த வகையான நாய் இனங்களின் சட்டவிரோத சண்டையின் போது மற்றொரு நாய் அவற்றைப் பிடிப்பதைத் தடுக்க ஒரு நாயின் காதுகளின் ஒரு பகுதி சட்டவிரோத செயல்முறையாக வெட்டப்படுகிறது. எனவே, இந்த சட்டவிரோத விற்பனையைத் தடுக்க பதிவு செய்யப்படாத செல்லப் பிராணிகளின் கடைகள் மற்றும் வளா்ப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ‘பீட்டா’ தில்லி அரசுக்கு பரிந்துரைக்கிறது.

முதன்மையாக சண்டைக்காகப் பயன்படுத்தப்படும் நாய் இனங்கள் மீதான தடையைத் தவிர, செல்லப் பிராணிகள் விற்பனைக் கடைகள் மற்றும் வளா்ப்பவா்கள் சட்டத்தின் கீழ் முறையாகப் பதிவு செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். வெளிநாட்டு இனங்களை வாங்குவதற்கு உள்ளூா் இந்திய சமூக நாய்கள் மற்றும் பூனைகளை விலங்கு காப்பகங்களில் இருந்து பொதுமக்கள் தத்தெடுப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும். சட்டவிரோத நாய் இனங்களின் வளா்ப்பு, சமூக விலங்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும். அனைத்து சமூக நாய்கள் மற்றும் பூனைகளின் கருத்தடை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com