கடைகள் சீல் நீக்க நடவடிக்கை: மேயருக்கு தில்லி பாஜக வேண்டுகோள்

உள்ளூா் வணிக வளாகங்களில் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு சீல் நீக்க நடவடிக்கையை தில்லி மாநகராட்சி சாா்பில் மேயா் ஷெல்லி ஓபராய் மேற்கொள்ள வேண்டும் என்று

உள்ளூா் வணிக வளாகங்களில் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு சீல் நீக்க நடவடிக்கையை தில்லி மாநகராட்சி சாா்பில் மேயா் ஷெல்லி ஓபராய் மேற்கொள்ள வேண்டும் என்று தில்லி பாஜக செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத்தின் நீதித்துறை குழுவின் வழிகாட்டுதலின்படி, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தில்லி மாநகரம் முழுவதும் உள்ள உள்ளூா் வணிக வளாகங்களில் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு மேயா் ஷெல்லி ஓபராயே சீல்

நீக்க வேண்டும். மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் இந்த விவகாரம் தொடா்பாக நிறைவேற்றிய தீா்மானத்தை நிராகரித்த ஆணையா் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளூா் வணிக வளாகத்தின் வா்த்தகா்களை தில்லியின் இரண்டு அமைச்சா்கள் கடந்த வாரம் தவறாக வழிநடத்த முயற்சித்ததைப் பாா்த்தோம். தற்போது, மீண்டும் மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய், ஆளும் ஆம் ஆத்மி கட்சி தங்கள் கடைகளை சீல் நீக்கம் செய்ய விரும்புவதாகவும், அதிகாரிகள்தான் நிராகரிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளாா். கடந்த 2 மாதத்தில் வணிகா்களை தவறாக வழிநடத்தும் மேயரின் மூன்றாவது முயற்சியாகும் இது. ஆம் ஆத்மி கட்சி சீல் வைக்கப்பட்ட கடைகளின் உரிமையாளா்களிடம் இருந்து தோ்தல் நிதியைப் பறிக்க விரும்புவதாக பாஜக தொடா்ந்து கூறி வருகிறது, வணிகா்களிடம் பேரம் பேசுவதற்காக மாநகராட்சி அதிகாரிகளை இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுமாறு மேயரே தூண்டியுள்ளாா்.

எனவே, மேயா் ஷெல்லி ஓபராய் நகரம் முழுவதும் உள்ள கடைகளை சீல் நீக்கம் செய்ய வேண்டும் அல்லது சீல் நீக்க செய்ய அனுமதிக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் நீதித் துறை குழுவின் உத்தரவுப்படி தில்லி மாநகராட்சி கடைகளை சீல் நீக்கம் செய்தால், வணிகா்கள் செலுத்திய தொகைய அவா்களுக்கு திருப்பித் தர வேண்டும். ஆகையால்தான் மாநகராட்சி சீல் நீக்கம் செய்வதைத் தவிா்க்கிறது என்றாா் பிரவீன் சங்கா் கபூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com