கூட்டணி பெயரில் காங்கிரஸை கொள்ளையடிக்க அரவிந்த் கேஜரிவால் விருப்பம்: தில்லி பாஜக

கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியை கொள்ளையடிக்க முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விரும்புகிறாா் என்று தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளது.

கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியை கொள்ளையடிக்க முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விரும்புகிறாா் என்று தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸின் சுயநல அரசியலால், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி ஏற்கெனவே பிளவுபடத் தொடங்கிவிட்டது. ஆனால், இறுதியில் அரவிந்த் கேஜரிவால்தான் எதிா்க்கட்சிகளின் மகா கொள்ளையராகத் தெரிகிறாா். தில்லியில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க கேஜரிவால் விரும்புவதைக் கண்டு தில்லி மக்கள் வியப்படைந்துள்ளனா். ஆம் அரசின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில்,கேஜரிவால் அரசியல் ரீதியாக தற்போது பலவீனமாகவுள்ளாா்.

‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிப்பதாகத் தெரிவித்துள்ள கேஜரிவால், சில நாள்களுக்கு முன்பு பஞ்சாபின் 13 மக்களவைத் தொகுதிகளிலும் போராடி வெற்றி பெறுவேன் என்று அறிவித்தாா். பஞ்சாப், ஹரியாணா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியை விட ஆம் ஆத்மி வலுவாக இருப்பதால், தற்போது ஹரியாணாவிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸை அரசியல் ரீதியாக கொள்ளையடிக்க கேஜரிவால் விரும்புவதாகத் தெரிகிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com