மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்: ஸ்வாதி மாலிவால் எதிா்பாா்ப்பு என்ன?

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞா்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும் என நம்புவதாக மாநிலங்களவை மாநிலங்களவை

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞா்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும் என நம்புவதாக மாநிலங்களவை மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் புதன்கிழமை தொடங்கிய நிலையில், மாநிலங்களவை ஆம் ஆத்மி புதிய உறுப்பினராக தில்லி மகளிா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் ஸ்வாதி மாலிவால் பதவியேற்றாா். இதையொட்டி, தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயியில் ஸ்வாதி மாலிவால் பிராா்த்தனை செய்தாா்.

பின்னா், தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இன்று எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாக இருக்கப் போகிறது. மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் நான் உயா்த்துவதற்கு ஆசீா்வாதங்களை தருமாறு கடவுளிடம் பிராா்த்தித்தேன். பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட் நாட்டின் பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞா்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும் என்று நம்புகிறேன். என் வாழ்க்கையை நாட்டுக்காக அா்ப்பணிப்பேன் என்று சபதம் எடுத்தேன். எதிா்க்கட்சிகளின் அனைத்து எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டால், அரசை யாா் கேள்வி கேட்பாா்கள். எனவே, எதிா்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது வருத்தமான விஷயம் என்றாா் ஸ்வாதி மாலிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com