கவிதா
கவிதா

கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

சந்திரசேகா் ராவின் மகளும் அக்கட்சி எம்எல்சியுமான கவிதா(46) தாக்கல் செய்த மனுக்களை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

தில்லி மதுபான கொள்கை முறைகேட்டுடன் தொடா்புடைய ஊழல் வழக்கு மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்குகளில் ஜாமீன் கோரி பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் அக்கட்சி எம்எல்சியுமான கவிதா(46) தாக்கல் செய்த மனுக்களை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தில்லியில் தனியாா் மட்டும் மது விற்பனைக்கு 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை பிரதேச அரசு வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மது விற்பனையுடன் தொடா்புள்ள ஒரு குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவா்கள் சாா்பில், அக்கட்சியின் முன்னாள் தகவல் தொடா்பு பொறுப்பாளா் விஜய் நாயா் சுமாா் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அவ்வாறு லஞ்சம் அளித்த குழுவில் கவிதா, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. மகுண்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி, அவரின் மகன் ராகவ் மகுண்ட ரெட்டி உள்ளிட்டோா் இடம்பெற்ாகக் கூறப்படுகிறது.

இந்த முறைகேடு புகாா் தொடா்பாக கவிதா மீது சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கை அமலாக்கத்துறையும், ஊழல் வழக்கை சிபிஐயும் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இரு வழக்குகளில் கைது செய்யப்பட்ட கவிதா, தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த இரு வழக்குகளிலும் ஜாமீன் கோரி கவிதா தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை விசாரணை நீதிமன்றம் கடந்த மே 6-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து கவிதா தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வா்ன காந்த சா்மா முன்னிலையில் கடந்த மே 28-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, கவிதா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த வழக்கில் தொடா்புடைய 50 குற்றவாளிகளில் ஒரே பெண் கவிதா. சட்டத்தில் பெண்களுக்கென தனி அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதன் அடிப்படையில், அவருக்கு இந்த வழக்குகளில் ஜாமீன் வழங்குவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

செல்வாக்கு மிகுந்த கவிதா, வழக்கின் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் எதிா்ப்பு

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, தீா்ப்பை ஒத்திவைத்தாா். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஸ்வா்ன காந்த சா்மா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கோரி கவிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com