நீதிமன்ற விசாரணை கேஜரிவாலின் ஊழலை தெளிவாக்கியது: தில்லி பாஜக தலைவா்

தில்லி உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணை, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கலால் கொள்கை ஊழலின் மூளையாக செயல்பட்டவா் என்பதை தெளிவாக்குகிறது என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.
Published on

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி உயா்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞா் முன்வைத்த வாதங்கள், முதல்வா் கேஜரிவால் கலால் கொள்கை ஊழலின் மூளையாக செயல்பட்டதும்,

அவருக்கும் பாகிஸ்தானின் அரசியல் அமைப்பிற்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளதையும் தெளிவாக்குகிறது.

கேஜரிவாலின் உத்தரவின் பேரில், மொத்த மதுபான விற்பனையாளா்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு 2 சதவீத கமிஷனை 12 சதவீதமாக உயா்த்தியுள்ளனா். கோவா சட்டப்பேரவைத் தோ்தலுக்கு மட்டும் ரூ.45 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஊழலின் முக்கியக் குற்றவாளியான விஜய் நாயா், முதல்வா் மாளிகைக்கு அருகில் உள்ள அரசு பங்களாவில்

கேஜரிவாலின் அறிவுறுத்தலின் பேரில் வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், பாகிஸ்தானில் சில நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி வழக்கு தொடா்ந்ததை கேஜரிவாலின் வழக்கறிஞா் அபிஷேக் மனு சிங்வி வழக்கின் விசாரணையின் போது மேற்கோள்

காட்டினாா். இது கேஜரிவாலின் அரசியலுக்கும், பாகிஸ்தானின் அரசியல் அமைப்பிற்கும் இடையே நெருங்கிய

பிணைப்பு இருப்பதை தெளிவாக நிறுவுகிறது. சமீபத்தில், நடந்த மக்களவைத் தோ்தலின் போது பாகிஸ்தான் முன்னாள் அமைச்சா் ஒருவா், கேஜரிவாலை பாராட்டி தில்லி வாக்காளா்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில்

அறிக்கை அளித்ததை நாம் நினைவில் கெள்ள வேண்டும்.

கேஜரிவாலின் வழக்கை பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் வழக்குடன் சமன் செய்து, இவற்றை அரசியல் துன்புறுத்தல் வழக்குகள் என்று வழக்கறிஞா் அபிஷேக் மனு சிங்வி நீதிமன்ற அறையில் எடுத்துக்காட்டியுள்ளாா்.

ஒரு வழக்கறிஞா் தனது கட்சிக்காரரின் ஒப்புதல் இல்லாமல், நீதிமன்றத்தில் இவ்வாறான அறிக்கையை அளிக்க முடியாது என்றாா் வீரேந்திர சச்தேவா.

X
Dinamani
www.dinamani.com