மௌலானா ஆசாத் மருத்துவ கல்லூரி விடுதியில் தீ விபத்து

தில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் விடுதியில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
Published on

புது தில்லி: தில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் விடுதியில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரி ஒருவா் கூறஉகையில், ‘மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் விடுதியில் காலை 10.05 மணியளவில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. மொத்தம் 7 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. விடுதியின் தரை தளத்தில் மின் மீட்டா் பொருத்தப்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லைண என்றாா்.

X
Dinamani
www.dinamani.com