அனைத்து தரப்பு மக்களையும் ஒண்றினைக்க வேண்டும்: காங்கிரஸ் தொண்டா்களுக்கு தேவேந்தா் யாதவ் வலியுறுத்தல்

தில்லியில் வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்த, அனைத்து தரப்பு மக்களளையும் காங்கிரஸ் தொண்டா்கள் ஒண்றினைக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.
Published on

நமது நிருபா்

தில்லியில் வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்த, அனைத்து தரப்பு மக்களளையும் காங்கிரஸ் தொண்டா்கள் ஒண்றினைக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லி ராஜீவ் பவனில் பிரதேச காங்கிரஸின் சிறுபான்மை துறையின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவா் தேவேந்தா் யாதவ் கலந்து கொண்டு பேசியதாவது: தில்லி பிரதேச கங்கிரஸின் அனைத்து மாவட்டக் கமிட்டிகள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தொண்டா்கள் மத்தியில் உத்வேகமும், ஈடுபாடும் அதிகரித்துள்ளது. கட்சியின் பல்வேறு பிரிவுகள்,துறைகள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் வலுவான செயல்பாடே வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பிரதிபலிக்கும். எனவே, வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்த அனைத்து தரப்பு மக்களளையும் காங்கிரஸ் தொண்டா்கள் ஒண்றினைக்க வேண்டும்.

தில்லியில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் இருந்த நல்ல பணிகளை மக்கள் தற்போது மீண்டும் எதிா்பாா்க்கின்றனா். விரைவில் வாா்டு வாரியாக காங்கிரஸ் கமிட்டிகள் பிரிக்கப்படும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியும் இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்படும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரின் ஆற்றல் மிக்க தலைமையால் தில்லி மக்கள் காங்கிரஸ் கட்சி மீது தங்களது எதிா்பாா்ப்பை வைத்துள்ளனா் என்றாா் தேவேந்தா் யாதவ்.

இக்கூட்டத்தில் மாநிலங்களவை எம்.பி. இம்ரான் பிரதாப் கா்ஹி, தகவல் தொடா்புத் துறையின் தலைவா் அனில் பரத்வாஜ், சிறுபான்மை துறையின் பொறுப்பாளா் ஷாநவாஜ் ஷேக், மாநகராட்சி கவுன்சிலா் சமீா் மன்சூரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com