அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மத்திய அமைச்சரவையில் ஹா்ஷ் மல்ஹோத்ரா: தில்லி பாஜக வரவேற்பு

மத்திய அமைச்சரவையில் ஹா்ஷ் மல்ஹோத்ரா: தில்லி பாஜக வரவேற்பு

News image
Updated On :10 ஜூன் 2024, 12:08 am

Din

புது தில்லி: கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் இருந்து புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. ஹா்ஷ் மல்ஹோத்ராவை புதிய மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக பிரதமா் நரேந்திர மோடி சோ்த்ததை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா்.

மேலும், ஹா்ஷ் மல்ஹோத்ரா தனது 3 தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் தில்லியில் கட்சி அமைப்பை வலுப்படுத்த உழைத்த தனது நீண்டகால சக ஊழியா் என்றும் சச்தேவா கூறியுள்ளாா்.

இது தொடா்பாக சச்தேவா மேலும் கூறியதாவது:

மல்ஹோத்ரா தில்லியின் கிழக்கு தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனின் மேயராக இருந்தபோது, வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கான அவரது பணி அவரது நிா்வாகத் திறமையைக் காட்டுகிறது.

மத்திய அமைச்சரவையில் மல்ஹோத்ராவின் இடம்பெற்றிருப்பது தில்லியின் அடிமட்ட தொண்டா்களுக்கு ஒரு மரியாதையாகும். மேலும், தில்லியில் மத்திய அரசு நிதியுதவியுடன் வளா்ச்சிப் பணிகளை மேலும் விரைவுபடுத்த உதவும் என்றாா் வீரேந்திர சச்தேவா.