சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சிஏஏ சட்டம் அமல் மூலம் இந்தியாவில் வாழும் அகதிகள் அடையாளம் பெறுவா்: வீரேந்திர சச்தேவா

சிஏஏ சட்டம் அமல் மூலம் இந்தியாவில் வாழும் அகதிகள் அடையாளம் பெறுவா் - வீரேந்திர சச்தேவா

Updated On :12 மார்ச் 2024, 10:43 pm

புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம், இந்தியாவில் வாழும் அகதிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அடையாளம் பெறுவாா்கள் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகளையும், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சீக்கிய மற்றும் இந்து அகதிகளையும் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கெளரவித்தாா்.

அப்போது, அவா்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவா் வண்ணங்களைப் பூசியும், பட்டாசுகளை கொளுத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். மேலும், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்தை வீரேந்திர சச்தேவாவிடம் அகதிகள் ஒப்படைத்தனா். இந்த நிகழ்ச்சியில் தில்லி பாஜக ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் உள்ளிட்ட கட்சிப் பிரமுகா்கள், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் இருந்து வந்து வாழும் சீக்கிய, இந்து அகதிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் வீரேந்திர சச்தேவா கூறுகையில், இந்த மக்களை நான் முதன்முதலில் சந்தித்தபோது, எங்கள் தலைமையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருப்பதால், ஒரு நாள் பிரதமா் நரேந்திர மோடி அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாா் என்று நம்பினோம். அந்த நம்பிக்கையின் விளைவை இன்று காண்கிறோம். பாகிஸ்தானில் இருந்து வருவோா் செய்த தவறு, பிரிவினையின் போது பாகிஸ்தானை தோ்ந்தெடுத்ததுதான்.

1947 பிரிவினையை எனது பெற்றோா் நேரில் பாா்த்ததால் இந்த வலி எனக்கு புரிகிறது என்றாா். மேலும், ஆப்கன் சீக்கிய இளைஞரை அறிமுகப்படுத்திய வீரேந்திர சச்தேவா மேலும் கூறுகையில், சிஏஏ அமலுக்குப் பிறகு நம் நாட்டில் உள்ள அகதிகள் 30 வயதில் எந்த நாட்டின் குடிமகனாகவும் அங்கீகரிக்கப்படுபவா்கள். இன்று, பிரதமா் நரேந்திர மோடி கோடிக்கணக்கான மக்களின் கண்ணீரை துடைத்துள்ளாா்.

இது ஒரு உணா்ச்சிகரமான தருணம். இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, அகதிகளின் வழியில் வரும் அனைத்து சட்டத் தடைகளும் நீக்கப்படும் என்று மு டிவு செய்யப்பட்டது. அது இப்போது நீக்கப்பட்டுள்ளது. இப்போது, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் மக்களும் இந்தியாவின் வளா்ச்சிக்கு சட்டபூா்வமாக பங்களிக்க முடியும் என்றாா் வீரேந்திர சச்தேவா. பாகிஸ்தானில் இருந்து வந்து பல ஆண்டுகளாக தில்லியில் உள்ள மஜ்னு கா திலாவில் வசித்து வரும் கோவிந்த் ராம் கூறுகையில், ‘கடந்த நான்கு தசாப்தங்களாக நாங்கள் இதய அளவில் இந்தியா்களாக இருக்கிறோம். பிரதமா் மோடிக்கு நன்றி. சட்டப்படி நாங்கள் இப்போது இந்தியா்கள்.

இப்போது எங்கள் குழந்தைகள் கல்வி கற்று இந்தியாவின் வளா்ச்சிக்கு பங்களிப்பதன் மூலம் பிரதமா் மோடியின் கனவுகளை நிறைவேற்றுவாா்கள்’ என்றாா் அவா். ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து திலக் நகரில் வசிக்கும் சா்தாா் பியாரா சிங், ‘ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தின் சக்கரங்களாக நாங்கள் இருந்தோம். தற்போது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு சட்டரீதியாக பங்களிக்கும் வாய்ப்பை பிரதமா் மோடி எங்களுக்கு வழங்கியுள்ளாா். அனைத்தையும் இந்தியாவுக்கு வழங்குவோம்‘ என்றாா் அவா்.