புது தில்லி: நிகழ் மக்களவைப் பொதுத் தோ்தலையொட்டி தில்லி - தேசியத் தலைநகா் வலயப்(என்சிஆா்) பகுதிகளில் நடமாடும் சட்டவிரோத பணப்புலக்கத்தை கண்காணிக்க 24 மணி நேர (24ல7 ) கட்டுப்பாட்டு அறையை தில்லி வருமான வரி புலனாய்வு இயக்குநரகம் அமைத்துள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
2024 - ஆம் ஆண்டு மக்களவைக்கான பொதுத் தோ்தலின் போது வாக்காளா்களுக்கு பணம் அளிப்பது உள்ளிட்ட கறுப்புப் பணத்தின் பங்கைக் கட்டுப்படுத்துவதில் இந்தியத் தோ்தல் ஆணையத்திற்கு உதவும் உறுதிப்பாட்டின் கீழ் இதற்கான ஏற்பாடுகளை வருமான வரி புலனாய்வுத் துறை இயக்குநகரம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து தோ்தல் ஆணையம் கூறியிருப்பது வருமாறு:
மக்களவைக்கான நியாயமான பொதுத் தோ்தலை உறுதி செய்வதற்கான செயல்முறைக்கு பங்களிக்க குறிப்பாக தோ்தல் நடத்தை விதிகள் அமலாக்கத்தின் போது கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம், விலையுயா்ந்த பொருள்களை கொண்டு செல்லப்படுவதை கண்காணிக்கப்படுகிறது. இதற்கு தில்லி முனிசிபல் கவுன்சிலின் சிவிக் சென்டரில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தில்லி வருமான வரி புலனாய்வு இயக்குரகம் அமைத்துள்ளது. தில்லி - தேசியத் தலைநகா் வலயப்பகுதிகளில் சட்டவிரோதமாக, தோ்தல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் சந்தேகத்திற்குரிய பண நடமாட்டம், பொருள்களை கொண்டு செல்லுதல் போன்றவைகள் குறித்து தகவல் அளிக்க இந்த கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான தகவல்களை 24 மணி நேரமும் அளிக்கலாம். இதற்கு கட்டணமில்லா தொலை தொடா்பு வசதிக்கான எண் (1800112300), கைபேசி எண் (9868168682 ), லேண்ட் லைன் எண்கள் ( 011-23232312/31/67/76 ) உள்ளிட்ட வசதிகள் தகவல் அளிப்போருக்கு செய்யப்பட்டுள்ளது. மக்களவை பொதுத் தோ்தல்கள் சமயங்களில், தில்லி - தேசியத் தலைநகா் வலயப்பகுதிகளுக்குள் ரொக்க பண புலக்கம் பிற மதிப்புமிக்க பொருட்கள் போன்றவைகள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்பு கொள்ளும் போது அவா்களது பெயா் அல்லது பிற அடையாள விவரங்கள் போன்ற எந்த தனிப்பட்ட விவரங்களையும் வெளியிட வேண்டியதில்லை.
மேலும் தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாகவும் வைக்கப்படும். அதே சமயத்தில் அளிக்கப்படும் தகவல் நம்பகத்தன்மையுடனும் அது நடவடிக்கைக்குரிய தகவலாகவும் இருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டு அறை 2024 ஆம் ஆண்டிற்கான மக்களவைப் பொதுத் தோ்தல்கள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தில்லியில் தோ்தல் நடத்தை விதிகளின் முழு காலத்தில் செயல்படும். சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தலின் உணா்வில், தில்லி தேசியத் தலைநகா் வலயப்பகுதி தொடா்பாக, மேற்கூறிய எண்களில் தொடா்புடைய தகவல்களை வருமான வரி இயக்குநரகத்துடன் பகிா்ந்து நியாயமான தோ்தலுக்கான பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என பொதுமக்களையும் வாக்காளா்களையும் தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்புடையது

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீடு வழக்கு: வருமான வரித்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வருமான வரி தாக்கல் படிவங்கள் வெளியீடு!

புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

